துபாயில் பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் பார்க்கின் (Parkin) நிறுவனம், புதிய மாறும் கட்டணக் கட்டமைப்பை (Variable Parking Tariff) ஏப்ரல் 4 முதல் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய திட்டம், உச்ச நேரங்கள் (Peak Hours) மற்றும் பகுதியளவு உச்ச நேரங்கள் (Off-Peak Hours) அடிப்படையில் பார்க்கிங் கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன் படி மக்கள் அதிகமாக பயன்படுத்தும் உச்ச நேரங்களில் (காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை) பார்க்கிங் கட்டணங்கள் அதிகரிக்கின்றன.
ஆனால் பகுதியளவு உச்ச நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை) பழைய கட்டணத்திலேயே தொடரும். இந்த மாற்றம், நகரத்தில் பார்க்கிங் சேவைகளை திறம்பட பயன்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்படாது.
மண்டலம் A:
பீரிமியம் பார்கிங்கிற்கான விலைகள்:
- 60 நிமிடங்களுக்கு: AED 6 மற்றும் AED 4
- 2 மணி நேரத்திற்கு: AED 12 மற்றும் AED 8
- 3 மணி நேரத்திற்கு: AED 18 மற்றும் AED 12
- 4 மணி நேரத்திற்கு: AED 24 மற்றும் AED 16
ஸ்டாண்டர்ட் பார்கிங்கிற்கான விலை:
- 30 நிமிடங்கள்: AED 2
- 60 நிமிடங்கள்: AED 4
- 2 மணி நேரம்: AED 8
- 3 மணி நேரம்: AED 12
- 4 மணி நேரம்: AED 16
மண்டலம் B:
பிரீமியம் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 6 மற்றும் AED 3
- 2 மணி நேரம்: AED 12 மற்றும் AED 6
- 3 மணி நேரம்: AED 18 மற்றும் AED 9
- 4 மணி நேரம்: AED 24 மற்றும் AED 12
ஸ்டாண்டர்ட் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 4 மற்றும் AED 3
- 2 மணி நேரம்: AED 8 மற்றும் AED 6
- 3 மணி நேரம்: AED 12 மற்றும் AED 9
- 4 மணி நேரம்: AED 16 மற்றும் AED 12
மண்டலம் C
பிரீமியம் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 6 மற்றும் AED 2
- 2 மணி நேரம்: AED 12 மற்றும் AED 5
- 3 மணி நேரம்: AED 18 மற்றும் AED 8
- 4 மணி நேரம்: AED 24 மற்றும் AED 11
ஸ்டாண்டர்ட் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 4 மற்றும் AED 2
- 2 மணி நேரம்: AED 8 மற்றும் AED 5
- 3 மணி நேரம்: AED 12 மற்றும் AED 8
- 4 மணி நேரம்: AED 16 மற்றும் AED 11
மண்டலம் D
பிரீமியம் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 6 மற்றும் AED 2
- 2 மணி நேரம்: AED 14 மற்றும் AED 4
- 3 மணி நேரம்: AED 18 மற்றும் AED 5
- 4 மணி நேரம்: AED 24 மற்றும் AED 7
ஸ்டாண்டர்ட் பார்கிங்கிற்கான விலை:
- 1 மணி நேரம்: AED 4 மற்றும் AED 3
- 2 மணி நேரம்: AED 8 மற்றும் AED 6
- 3 மணி நேரம்: AED 12 மற்றும் AED 9
- 4 மணி நேரம்: AED 16 மற்றும் AED 12
புதிய உச்ச மற்றும் குறைந்த பார்க்கிங் விலையை வெளியிடும் திட்டத்தை 2023 டிசம்பர் மாதம் முன் பார்கின் உறுதிப்படுத்தியது.
இத்திட்டம் “பெரிய அளவிலான, அதிக பரபரப்பான, அதிக தேவைக்கேற்ப உள்ள பகுதிகளில் பார்கிங் மேலாண்மையை மேம்படுத்துவது” எனும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இந்த மாற்றங்கள், “சிறந்த போக்குவரத்து நிலைமைகளை ஊக்குவிப்பதற்கு, குறிப்பாக உச்ச நேரங்களில் மற்றும் அமீரகத்தில் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளின் போது உதவும் என்றும் கூறப்பட்டது.
