இலவச Wifi வசதி, சார்ஜிங் வசதியுடன் துபாய் முழுக்க அறிமுகமாகவுள்ள 6 புதிய ஸ்மார்ட் ஸ்டேஷன்கள்:

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் 44-வது GITEX குளோபலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் ஸ்டேஷன்கள் என்ற வசதி விரைவில் துபாய் முழுக்க கொண்டுவரப்படவுள்ளது. 

இந்த ஸ்மார்ட் நிலையங்களில் , இலவச Wi-Fi வசதி, போன் சார்ஜிங் வசதி, சைக்கிள் பார்க்கிங் மற்றும் ஸ்மார்ட் திரைகள் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளன. இந்த நிலையங்களில் அமைந்துள்ள ஸ்மார்ட் திரைகளை பயன்படுத்தி அருகாமையில் இருக்கும் சுவாரசியமான இடங்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையங்களில் குடைகள், அமர்விடங்கள், மற்றும் சைக்கிள்களுக்கு காற்று நிரப்பும் கருவிகள் போன்ற பிற வசதிகளை வழங்கி, மொத்த பயணஅனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆணையத்தின் ITS இயக்குனரான முகமது அல் அலி, இது குறித்து கூறுகையில் இந்த ஸ்டேஷன்களின் நோக்கம் எமிரேட் முழுக்க சைக்கிள் ஓட்டுபவர்களை ஊக்குவித்து அதிகமாக்குவதே என்றார்.

இது முதன் முதலில் அல் பர்ஷா 2 பகுதியில் கொண்டுவரப்படும் எனவும் பின்னர் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.