புத்தாண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள்; அமீரகத்தில் எங்கெங்கு பார்க்கலாம்?

2026-ம் ஆண்டை வரவேற்க ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் தயாராகி வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் வகையில் துபாயின் புர்ஜ் கலீபா முதல் அபுதாபியின் பாலைவனப் பகுதிகள் வரை கண்கவர் வாணவேடிக்கைகள் மற்றும் ட்ரோன் ஷோக்கள் நடத்தப்பட உள்ளன.

துபாய் (Dubai)

பாம் ஜுமேரா (Atlantis The Palm):

கடலுக்கு நடுவில் தீவு முழுவதும் வானம் வண்ணமயமாகும் வகையில், வாணவேடிக்கை நடைபெறும். 

எக்ஸ்போ சிட்டி: 

குழந்தைகளுக்காக இரவு 9 மணிக்கும், பின் நள்ளிரவு 12 மணிக்கும் வாணவேடிக்கை நடைபெறும்.

அல் சீஃப் (Al Seef):

துபாயின் பாரம்பரிய கட்டிடங்களுக்கு இடையே வாணவேடிக்கை நடைபெறும்.

ப்ளூவாட்டர்ஸ் தீவு & ஐன் துபாய் (Bluewaters Island, Ain Dubai):

கூட்டத்தை தவிர்த்து, எந்த தடையும் இல்லாமல் வாணவேடிக்கை காண விரும்பினால் Ain Dubai-க்கு செல்லலாம். டிக்கெட் விலை: சாதாரண கேபின் AED 315, பிரீமியம் கேபின் AED 695.

ஜே.பி.ஆர் (The Beach, JBR): 

கடற்கரையில் நின்றபடி வாணவேடிக்கையை ரசிக்கலாம்.

துபாய் பார்க்ஸ் & ரிசார்ட்ஸ்: 

இரவு 9:30 மணிக்கு புத்தாண்டு வாணவேடிக்கை தொடங்கும்.

On the water: 

படகுகள் மற்றும் சொகுசு கப்பல்களில் (Yachts) அமர்ந்து வாணவேடிக்கையை ரசிக்கலாம்.

புர்ஜ் கலீபா

துபாயின் அடையாளம் என்று போற்றப்படும் புர்ஜ் கலிபாவில் (Burj Khalifa), 2026 புத்தாண்டை முன்னிட்டு லேசர் ஷோ மற்றும் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளை  துபாய் மால், புர்ஜ் பார்க்  மற்றும் பிசினஸ் பே  ஆகிய இடங்களில் கண்டு களிக்கலாம். 

வழக்கமாக ஒரு நாள் மட்டுமே நடக்கும் கொண்டாட்டங்கள், இந்த முறை டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை ஒரு வாரம் முழுவதும் நடைபெற உள்ளது. ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ (Red Chillies Entertainment) நிறுவனத்துடன் இணைந்து, இந்த ஆண்டு பாலிவுட் பாணியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் லேசர் ஷோக்கள் நடத்தப்பட உள்ளன.

டவுன்டவுன் துபாயில் கண்கவர் ஊர்திகள், கலைஞர்கள் மற்றும் பொம்மலாட்டங்கள் அடங்கிய பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்புபவர்களுக்காக புர்ஜ் பார்க்கில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெரியவர்களுக்கு கட்டணமாக AED  997.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கட்டுகளை PlatinumList-ல் வாங்கலாம். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 

டவுன்டவுன் துபாயில் வழக்கம்போல பொதுமக்கள் இலவசமாக பார்க்க இடங்கள் உள்ளன. ஆனால் இவை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் நிரப்பப்படும் என்பதால், மிக சீக்கிரமாகவே அங்கு செல்ல வேண்டும்.

குளோபல் வில்லேஜ்:

இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 7 நாடுகளின் புத்தாண்டு பிறக்கும் அதே நேரத்தில் குளோபல் வில்லேஜில் அந்த நேரத்திற்கு ஏற்ப புத்தாண்டு  கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் வாணவேடிக்கை &  டிரோன் ஷோக்கள் நடைபெறும்.

புத்தாண்டு இரவில் குளோபல் வில்லேஜின் மூன்று வாயில்களும் மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும். உலகின் வெவ்வேறு நாடுகளின் நேரப்படி, ஒவ்வொரு மணி நேரமும் வாணவேடிக்கை மற்றும் டிரோன் ஷோக்கள் நடைபெறும். 

சீனா – இரவு 8 மணிக்கு

தாய்லாந்து – இரவு 9 மணிக்கு

பங்களாதேஷ் – இரவு 10 மணிக்கு

இந்தியா – இரவு 10.30 மணிக்கு

பாகிஸ்தான் – இரவு 11 மணிக்கு

துபாய் – நள்ளிரவு 12 மணிக்கு

துருக்கி – அதிகாலை 1 மணிக்கு

அபுதாபி 

அபுதாபி கார்னிஷ் (Abu Dhabi Corniche):

 8 கி.மீ நீளமுள்ள கடற்கரை பகுதியில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நடைபெறும்.

எமிரேட்ஸ் பேலஸ் மாண்டரின் ஓரியண்டல் (Emirates Palace Mandarin Oriental):

பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியுடன் கூடிய வாணவேடிக்கை  நடைபெறும்.  

லிவா திருவிழா (Liwa Festival): 

பாலைவனத்தில் நட்சத்திரங்களுக்கு கீழ் முகாமிடுபவர்களுக்காக தல் முரீப் (Tal Moreeb) பகுதியில் வாணவேடிக்கை  நடைபெறும்.  

யாஸ் தீவு (Yas Island)

இரவு 9 மணி மற்றும் நள்ளிரவு 12 மணி என இரண்டு முறை வாணவேடிக்கை நடைபெறும்.

ஷேக் சயீத் பெஸ்டிவல்:

உலக சாதனை புரியும் நோக்கில் ஷேக் சயீத் பெஸ்டிவலில் 62 நிமிடங்கள் நீடிக்கும் பிரமாண்ட வாணவேடிக்கை & 6,500 டிரோன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அல் வத்பா பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். 62 நிமிடங்கள் நீடிக்கும் வாணவேடிக்கை.

 இது 5 புதிய கின்னஸ் சாதனைகளை முறியடிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய எமிராட்டி நடனங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும்.

சுமார் 60 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடைபெறும் வாணவேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்.

ஷார்ஜா (Sharjah)

அல் ஹீரா கடற்கரை (Al Heera Beach): 

10 நிமிடங்களுக்கு நீடிக்கும் வாணவேடிக்கையை காணலாம்.

அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட் (Al Majaz Waterfront)

ஷார்ஜாவின் கண்கவர் வானுயர்ந்த கட்டிடங்களின் பின்னணியில், இரவு வானத்தை ஒளிரச் செய்யும் ஐந்து நிமிட வாணவேடிக்கை  நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையவுள்ளது.

கோர்  ஃபக்கான் கடற்கரை (Khor Fakkan Beach)

லேசர் ஷோ மற்றும் 10 நிமிட வாணவேடிக்கை நடைபெறும். 

அஜ்மான் 

அஜ்மான் கார்னிஷ் (Ajman Corniche):

குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழுவாகச் சென்று பொழுதுபோக்குவதற்கு மிகவும் பிரபலமான இந்தச் சுற்றுலாத் தளத்தில் வாணவேடிக்கை நடைபெறும். 

ராஸ் அல் கைமா: 

அல் மர்ஜான் தீவு (Al Marjan Island)

 இந்தத் தீவில் நடைபெறும் வாணவேடிக்கை உலகத்தரம் வாய்ந்தது. மர்ஜான் தீவின் எந்தப் பகுதியில் இருந்தும் வானவேடிக்கையை ரசிக்கலாம். தயா (Dhayah), ஜெய்ஸ் (Jais), யானஸ் (Yanas) மற்றும் ராம்ஸ் (Rams) ஆகிய பார்க்கிங் மண்டலங்களில் இருந்தும் மக்கள் வாணவேடிக்கையைத் தெளிவாகக் காணலாம்.

 கார்னிஷ் அல் கவாசிம் (Corniche Al Qawasim)

அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாகக் குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் சிரமமின்றி ரசிப்பதற்காக இங்கு முன்கூட்டியே ஒரு காட்சி நடத்தப்படுகிறது.

TAGGED: