சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவூதி அரேபியா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், அவை இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்பட்டு, இருநாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு
ரியாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்அவர்களும் மற்றும் ரியாத்தின் பட்டத்து இளவரசர் மாண்புமிகு முகமது பின் சல்மான் அவர்களும், இருவரும் நேரில் சந்தித்துப் பேசிய போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்?
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே, வெளிநாடுகளிடம் இருந்து இருநாடுகளை பாதுகாப்பதாகும். சவூதி அரேபியா மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தேவை ஏற்பட்டால் பாகிஸ்தான் தனது அணுஆயுதத்தை கூட பயன்படுத்த இந்த ஒப்பந்தத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு அபாயம்!
பாகிஸ்தான் – சவூதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்ட நிலையில், தற்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி, இனி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் சவூதி அரேபியா இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
