மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு – யுவன் கூட்டணி; துபாயில் பட பூஜை!

பிரபல நடிகர்கள் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணையும் புதிய திரைப்படத்தின் பூஜை,  துபாயில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்றது.

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2001ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் படத்திற்குப் பிறகு, பிரபுதேவா, வடிவேலு, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.

இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்க, KRG குழும தலைவர் கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில்,  KRG கண்ணன் ரவி தயாரிக்கும் நான்காவது படம் ஆகும்.

விஜய் சேதுபதி நடித்த ‘ACE’ படத்தில் நடித்த பப்லு பிரித்விராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். சண்டைப் பயிற்சியை பீட்டர் ஹெய்ன் மேற்கொள்கிறார்.

பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் இதற்கு முன்பு, ‘காதலன்’, ‘எங்கள் அண்ணா’, ‘காதலா காதலா’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, மற்றும் ‘ராசய்யா’ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ ஆகிய படங்களில் வடிவேலு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: