ராஸ் அல் கைமா: கடற்கரை முதல் மலைத்தொடர் வரை; பிரபல சுற்றுலா வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் பிரபலமான சுற்றுலா தளமான ஜெபல் ஜெய்ஷ் மலைத்தொடருக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளது.  

நாட்டின் கிழக்கு பகுதியில் ஜெபல் ஜெய்ஷ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ராஸ் அல் கைமா. அமீரகத்தின் ஏழு எமிரேட்களின் ஒன்றான ராஸ் அல் கைமா பல பாரம்பரிய சுற்றுலா தளங்களுக்கு பெயர்பெற்றது. இங்குள்ள அருங்காட்சியகங்கள் வரலாற்று ஆர்வலர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது.

மேலும் இங்கு உள்ள கடற்கரைகள், மலைகள், ஆடம்பர ஹோட்டல்கள், ஸ்பா மற்றும் ஹாலிடே ரிசார்டுகள் ஆகியவை ராஸ் அல் கைமாவை நோக்கி அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. அந்த வகையில் ராஸ் அல் கைமாவில் சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் பேருந்து சேவையை ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் (RAKTA) தொடங்கியுள்ளது. 

சுற்றுலா வழித்தடத்தில் பேருந்து

ராஸ் அல் கைமாவில் பிரபலமான சுற்றுலா தளங்களான அல் ஜசிரா அல் ஹம்ரா மற்றும் ஜெபல் ஜெய்ஷ் வரை மஞ்சள் வழித்தடம் என்ற புதிய பேருந்து சேவையை ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடற்கரையை ஒட்டியுள்ள அல் ஜசிரா அல் ஹம்ராவில் புறப்படும் பேருந்து இடையே 12 நிறுத்தங்களில் இன்று இறுதியாக மலைத்தொடரான ஜெபல் ஜெய்ஷ் பகுதியை அடையும். பேருந்து நின்று செல்லும் 12 நிறுத்தங்களும் பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ள இடமாகும். 

நிறுத்தங்கள் 

  • அல் ஜசிரா அல் ஹம்ரா (பேருந்து புறப்படும் இடம்)
  • சோஃபிடெல் அல் ஹம்ரா பீச் ரிசார்ட் 
  • வால்டோர்ஃப் அஸ்டோரியா 
  • ரிக்சோஸ் பாப் அல் பஹர் 
  • மோவென்பிக் ரிசார்ட் அல் மர்ஜன் தீவு 
  • புல்மேன் ரிசார்ட் அல் மர்ஜன் தீவு 
  • ரோவ் அல் மர்ஜன் தீவு 
  • ஹில்டன் மற்றும் பிறரின் ஹாம்ப்டன்
  • ADNOC ஜெபல் ஜெய்ஸ் 
  • பியர் கிரில்ஸ் ஆய்வாளர்கள் முகாம் 
  • SAIJ மவுண்டைன் லாட்ஜ் 
  • ஜெய்ஸ் வியூவிங் டெக் பார்க்
  • 1484 பை புரோ உணவகம்
  • ஜெபல் ஜெய்ஷ் (கடைசி நிறுத்தம்

பேருந்து அட்டவணை 

நவம்பர் 28 முதல் தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் இயங்கும். காலை 6 மணி முதல் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி பேருந்து ஜெபல் ஜெய்ஷிலிருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும்.

பயணிகளுக்கான வசதி

மஞ்சள் வழித்தடத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் மேம்பட்ட ஆன்போர்டு தொழில்நுட்பம் மற்றும் இலவச வைஃபை வசதியுடன் இயங்குகின்றன. பயணிகள் சேயர் செயலி மூலம் இந்த பேருந்து சேவைக்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். அதுமட்டுமின்றி இந்த செயலி மூலம் பேருந்து எங்கே செல்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும்.