Danube Properties வழங்கும் ரசோவரம் நடன போட்டி மற்றும் இசை நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது.
நடன போட்டி:
துபாயில் வாழும் இந்தியர்கள் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்த நேரம் வந்துவிட்டது. ரசோவரம் (RASOVARAM – The Spectrum of Music & Dance) ஒரு மிகப்பிரமாண்டமான சினிமா சார்ந்த நடன போட்டி துபாயில் நடைபெற உள்ளது.
நடன பாணி:
பரத நாட்டியம், ஒடிசி, கதக் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற நடனங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இசைத் தேர்வு:
சினிமா, ஆல்பம், ரீமேக்ஸ், நாட்டுப்புற இசை உள்ளிட்ட இந்திய மொழி இசையை தேர்வு செய்து கொள்ளலாம். அவமரியாதைக்குரிய பாடல்களை பயன்படுத்தக்கூடாது.
போட்டிக்கான நிபந்தனைகள்:
- சோலோ மற்றும் டூயட் ஆக நடனமாட அதிகபட்சமாக 3.5 நிமிடங்கள் வழங்கப்படும்.
- குழுவாக நடனமாட அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
- ஒரே நபர் பல குழுக்களில் பங்கேற்க முடியாது.
- பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- இந்த போட்டியில் ஒரு வின்னர் மற்றும் 2 ரன்னர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். நடுவரின் முடிவே இறுதியானது.
- ரசோவரம் குழு மூலம் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
பதிவு கட்டணம்:
சோலோ மற்றும் டூயட் நடன போட்டிக்கான பதிவு கட்டணம் முறையே AED 150 மற்றும் AED 250 ஆகும். குழு நடன போட்டிக்கான பதிவு கட்டணம் AED 500 ஆகும்.
நேரம்: மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி:
அதே போல் ரசோவரம் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கடம் இசைக்கலைஞர் மஞ்சூர் உன்னிகிருஷ்ணன், தவில் இசைக்கலைஞர் திருப்புனித்துரா ஸ்ரீகுமார், குமர நெல்லூர் ஆகாஷ் கிருஷ்ணா, வைக்கம் விஜயகுமார் ஆகிய மூத்த இசைக்கலைஞர்களுடன் சிறுமி கங்காசசிதரனின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
டிக்கெட் கட்டணம்:
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் AED 50 ஆகும்.
நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
நடைபெறும் இடம்:
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஏப்ரல் 13 ஆம் தேதி துபாய் ஜபீல் லேடீஸ் க்ளப் தியேட்டரில் நடைபெறுகிறது.
எங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
For More Details,
Contact: Sujitha Raman
Instagram: @relish_the_rasa_
