NOL அட்டையின் பயன்பாட்டை விரிவுபடுத்த RTA திட்டம்

பேருந்து மற்றும் மெட்ரோவில் பயன்படுத்தப்படும் NOL அட்டையில் கூடுதலாக  பார்க்கின், ஷாப்பிங் உள்ளிட்டவற்றுக்கு கட்டணங்கள் செலுத்தும் வசதியை கொண்டு வர துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

NOL அட்டையின் பயன்பாடு

துபாயில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ள NOL அட்டை தற்போது பேருந்து, மெட்ரோ, ட்ராம், டாக்ஸி உள்ளிட்ட பல்வேறு பொதுப் போக்குவரத்துகளில் கட்டணத்தைச் செலுத்த பயன்பட்டு வருகிறது. இந்த ஒரே அட்டை மூலம் பயணிகள் எளிதாகவும், வேகமாகவும் கட்டணம் செலுத்தும் வசதியை பெற முடியும்.

தினமும் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது தினசரி பயணத்திற்காக இந்த NOL அட்டையைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஸ்மார்ட் அட்டையின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஈடுபட்டுள்ளது.

வரப்போகும் புதிய நன்மைகள் 

இனிமேல் உங்கள் NOL அட்டையை மெட்ரோ அல்லது பேருந்து பயணங்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்கின், ஷாப்பிங், டைனிங் மற்றும் கல்வி தொடர்பான கட்டணங்கள் செலுத்தும் வசதியை கொண்டுவரவுள்ளது. இதற்காக அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA), Parkin PJSC மற்றும் PayPal உடனான ஒப்பந்தங்களில் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் கையெழுத்திட்டுள்ளது. பணம் இல்லாமல் முழுமையாக டிஜிட்டல் பயன்பாட்டை கொண்டு வருவதே இதன் இலக்காகும். 

துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கார்ப்பரேட் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அல் முதர்ரெப் கூறுகையில், “KHDA, GTS Alive Middle East, Parkin மற்றும் PayPal ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிறுவனங்களுடன் துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணைந்து செயல்படும்.

Parkin-ல் NOL அட்டை பயன்பாடு

பார்கின் உடனான ஒப்பந்தத்தின் மூலம், இரு நிறுவனங்களுக்கிடையில் டிஜிட்டல் கட்டண பரிமாற்றம் செயல்படும். அதனால் NOL அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர்கள் நேரடியாக Parkin கட்டணத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது

பார்கின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல்லா அல் அலி கூறுகையில், “இந்த கூட்டாண்மை NOL மற்றும் Parkin நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண முறைகளுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் மாறுபட்ட கட்டண விருப்பங்களை வழங்குகிறது. துபாயில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஸ்மார்ட், விரிவான மற்றும் நிலையான சேவைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியை இது குறிக்கிறது.

கல்வியில் NOL அட்டை பயன்பாடு

அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்துடன் (KHDA) இணைந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “Study in Dubai – nol ISIC” அட்டையை அறிமுகப்படுத்தும். இந்த அட்டை மாணவர் அடையாள அட்டையாகவும், கல்வி தொடர்பான கட்டணங்களை செலுத்தும் கட்டண அட்டையாகவும் செயல்படும்.

ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சயீத் முபாரக் பின் கர்பாஷ் கூறுகையில், “Study in Dubai – nol ISIC” அட்டை மாணவர்களுக்கு பல்வேறு விதமான சேவைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும்” என தெரிவித்தார். 

மின் கட்டணத்தில் NOL அட்டை பயன்பாடு

PayPal உடன் RTA செய்துள்ள ஒப்பந்தத்தின்படி NOL பயனர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படும். PayPal-ன் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிற்கான பிராந்தியத்தின் பிராந்தியத் தலைவர் ஓட்டோ வில்லியம்ஸ் கூறியதாவது, ”துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் உடனான எங்கள் கூட்டாண்மை, நம்பிக்கை, செயல்திறன் மற்றும் புதுமையால் இயக்கப்படும் தடையற்ற, டிஜிட்டல் பார்வையை பிரதிபலிக்கிறது” என்றார்.

RTA-வின் இந்த முயற்சி துபாயின் ஸ்மார்ட் சிட்டி தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கிறது. இது காகித டிக்கெட்டுகள் மற்றும் பணப் பயன்பாட்டைக் குறைத்து மக்களுக்கு மிகவும் வசதியான, நிலையான மற்றும் இணைக்கப்பட்ட நகர்ப்புற இயக்கத்தை ஊக்குவிக்கிறது.

ஆகஸ்ட் 17, 2024 முதல், துபாயில் உள்ள அனைத்து மெட்ரோ நிலைய டிக்கெட் அலுவலகங்களிலும் நோல் கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகை AED 50 ஆக அதிகரிக்கப்படும் என்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: