துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஸ்மார்ட் ஆப்கள் (Smart Apps) மூலம் முன்பதிவு செய்யப்படும் டாக்ஸி பயணங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள், குறிப்பாக கேரீம் (Careem) போன்ற துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் உரிமம் பெற்ற செயலிகள் மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்யும் பயணிகளுக்குப் பொருந்தும். சாலைகளில் டாக்ஸியை நிறுத்திப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு அறிவிப்பின்படி, இ-புக்கிங் மூலம் டாக்ஸியை முன்பதிவு செய்யும்போது இருந்த குறைந்தபட்ச கட்டணம் AED 12-லிருந்து தற்போது AED 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்கள் மற்றும் நேரங்களைப் பொறுத்து, ஆரம்பக் கட்டணம் மற்றும் முன்பதிவுக் கட்டணம் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
| நாள் | நேரம் | ஆரம்பக் கட்டணம் (Flagfall) | முன்பதிவுக் கட்டணம் (Booking Fee) |
| திங்கள் – வியாழன் | நெரிசலான நேரம் (Peak Hours) (காலை 8 முதல் 9.59 வரை), (மாலை 4 முதல் 7.59 வரை) | AED 5 | AED 7.5 |
| நெரிசலற்ற நேரம் (Off-Peak) (காலை 6 முதல் 7.59 வரை), (காலை 10 முதல் 3.59 வரை) | AED 5 | AED 4 | |
| இரவு நேரம் (மாலை 5.59 முதல் இரவு 10 வரை) | AED 5.5 | AED 4.5 | |
| வெள்ளி | நெரிசலான நேரம் (Peak Hours) (காலை 8 முதல் 9.59 வரை), (மாலை 4 முதல் இரவு 9.59 வரை) | AED 5 | AED 7.5 |
| நெரிசலற்ற நேரம் (Off-Peak) (காலை 6 முதல் 7.59 வரை), (காலை 10 முதல் 3.59 வரை) | AED 5 | AED 4 | |
| இரவு நேரம் (நள்ளிரவு 12 முதல் காலை 5.59 வரை) | AED 5.5 | AED 4.5 | |
| சனி & ஞாயிறு | நெரிசலான நேரம் (மாலை 4 முதல் 9.59 வரை) | AED 5 | AED 7.5 |
| நெரிசலான நேரம் (இரவு 10 முதல் 11.59 வரை) | AED 5.5 | AED 7.5 | |
| சாதாரண நேரம் (Off-Peak) (காலை 6 முதல் 7.59), காலை 8 முதல் 9.59 வரை), (காலை 10 முதல் 3.59) | AED 5 | AED 4 | |
| இரவு நேரம் (நள்ளிரவு 12 முதல் காலை 5.59 வரை) | AED 5.5 | AED 4.5 |
