ஹஜ் யாத்திரை காலம் நெருங்கி வருவதால், யாத்ரீகர்கள் தங்கள் புனித பயணத்தை சீராக நடத்த சவூதி அதிகாரிகள் சுங்க விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
60,000 ரியால் அல்லது அதற்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச்செல்லும் யாத்திரிகர்கள், இது தொடர்பாக சுங்கக் கட்டுப்பாட்டு மையங்களில் (விமான நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள்) கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும்.
3000 ரியாலுக்கு அதிகமான பரிசுப் பொருட்கள் அல்லது வர்த்தக அளவிலான லக்கேஜ் எடுத்துச் செல்லும் போதும் தெரியப்படுத்த வேண்டும்.
மருந்துகள், மருத்துவப் பொருட்கள், மற்றும் அனுமதி தேவைப்படும் பிற பொருட்கள் எடுத்துச்செல்லும் போது, முன்கூட்டியே அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுங்கத்தில் அறிவிக்க வேண்டும்.
எவற்றை எடுத்துச்செல்லக் கூடாது?
தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதற்கு எதிராக சவூதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் பயணத்தின் சுமுகத்தை சீர்குலைக்கும் என்று சுட்டிக்காட்டினர்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:
- அனுமதியில்லாத மருந்துகள்
- போலி நாணயங்கள்
- அரிய விலைமிகுந்த உலோகங்கள்
- உளவுப் பயன்பாட்டு சாதனங்கள் (Eavesdropping devices)
- போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத பொருட்கள்
மேலும் விவரங்களுக்கு சவுதி ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்தின் https://zatca.gov.sa வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு யாத்ரீகர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
