இந்திய வெளியுறவுத்துறை வழங்கும் புலம்பெயர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (SPDC) ஒவ்வொரு ஆண்டும் 150 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2006-07 கல்வியாண்டில் துவங்கிய இத்திட்டத்தில் வழங்கப்படும் 150 உதவித்தொகையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களின் குழந்தைகள் (PIO), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI), எமிக்ரேஷேன் சோதனையை கட்டாயமாக்கிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, மலேசியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, தாய்லாந்து மற்றும் ஏமன் (ECR Countries) என பட்டியல் படுத்தப்பட்டு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதிகள் என்ன?
இதன் மூலம் 17 முதல் 21 வயதிற்கு உட்பட்டு இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி குழுமங்களில், இளங்கலை பட்டம் (முதலாம் ஆண்டு) பயின்று வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும், PIO பிரிவினருக்கு 50, NRI பிரிவினருக்கு 50 மற்றும் ECR பிரிவினருக்கு 50 (இந்த 50-ல் இந்தியாவில் படிக்கும் ECR நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) படிக்கும் என 150 இடங்கள் பிரித்து வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2024-25 கல்வியாண்டுக்கான SPDC கல்வித்தொகை விண்ணப்பங்கள் தற்போது துவங்கியுள்ளன, இதற்கான இறுதி நாள் நவம்பர் 30, 2024 எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள், தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பொறியியல், தொழில்நுட்பம், மனிதநேயம், லிபரல், கலை, வணிகம், மேலாண்மை, பத்திரிகை, ஹோட்டல் மேலாண்மை, விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் வேறு சில படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 4000 அமெரிக்க டாலர்களை வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
