ஷார்ஜா ஒளி விழா எங்கெங்கே? எப்போது நடைபெறுகிறது?

ஷார்ஜா ஒளி விழா (Light Show) பிப்ரவரி 5 முதல் 23 வரை என 18 நாட்களுக்கு அமீரகத்தில் உள்ள 12 இடங்களில் நடைபெறுகிறது.

14வது ஒளி விழா கடந்த புதன் கிழமை தொடங்கி, வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  வழக்கமாக நடைபெறும்  இடங்களில் இம்முறை புதிதாக  நான்கு  இடங்கள் சேர்க்கப்பட்டு 12 இடங்களில் ஒளி விழா நடைபெற்று வருகிறது

SRTIP, அல் கல்பாவில் உள்ள அல் ஹெஃபையா ஏரி, அல் ஜடா மற்றும் அல் ஹீரா கடற்கரை ஆகிய இடங்களிலும் இம்முறை ஒளி விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு ஒளி விழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஷார்ஜா ஒளி விழா (SLF) எமிரேட்டின் கலாச்சார அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

ஒளியின் மூலம் கலாச்சாரத்தின் கதையைச் சொல்வதே இதன் குறிக்கோள். ஷார்ஜாவின் வரலாறு, பள்ளத்தாக்கின் உருவாக்கம் மற்றும் பண்டைய குடியேற்றங்கள் போன்ற தலைப்புகளில்  ஒளி மூலம் விளக்கப்படுகிறது.  இந்த விழா ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜா ஒளி விழா நடைபெறும் இடங்கள்: 

1. ஷார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் புதுமை பூங்கா (Sharjah Research Technology and Innovation):

ஷார்ஜா ஒளி விழா ஷார்ஜா ஆராய்ச்சி தொழில்நுட்பம் மற்றும் புதுமை பூங்காவில் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு ஒளி விழாவின் தொடக்க விழா இங்கு  நடைபெற்றது. திகைப்பூட்டும் ட்ரோன் நிகழ்ச்சிகள் மற்றும் வசீகரிக்கும் விளக்குகள் மூலம்  அறிவியல், படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மையின் கதைகளை  விவரிக்கின்றன. மனிதர்கள், பிரபஞ்சம் மற்றும் இயற்கைக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ட்ரோன் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி 5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 மணி – இரவு 11 மணி)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 மணி – 12 மணி)

2. அல் ஜடா (Al Jada):

அல் ஜடாவிலும் ஷார்ஜா ஒளி விழா நடைபெற்று வருகிறது.  இங்கு  5 மீட்டர், உயரமும் 2.5 மீட்டர் அகலமும் கொண்ட ஆறு உயரமான தூண்களை நிறுவி,  அதில் கவர்ச்சிகரமான மாறும் உள்ளடக்கத்தைக் காண்பிக்கும் உயர் தெளிவுத்திறன் கொண்ட LED திரைகள் வைக்கப்பட்டு உள்ளது. இது அதிவேக ஒலி விளைவுகளுடன் ஒத்திசைக்கப்படுகிறது.

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி 5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 –  இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு 12)

3. ஷார்ஜா மசூதி (Sharjah Mosque):

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி 7 முதல் 18 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 – இரவு 11) 

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு  12)

4. பீயா தலைமையகம் (BEEAH HQ): 

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 மணி – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 மணி – இரவு 12)

5. அல் ஹம்ரியா புதிய ஜெனரல் சூக் (Al Hamriyah New General Souk): 

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 மணி – இரவு 12)

6. அல் மஜாஸ் நீர் முகப்பு பகுதி (Al Majaz Waterfront):

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை 

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு 12)

7. அல் ஹீரா கடற்கரை (Al Heera Beach): 

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 மணி – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 மணி – இரவு 12)

8. அல் தைத் (Al Dhaid Fort):

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 – இரவு 11) 

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு 12)

 9. அல் ரஃபிசா அணை (Al Rafisah Dam):

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 மணி – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 மணி – இரவு 12)

10. அல் ஹெஃபையே ஏரி  (Al Hefaiyah Lake):

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் (மாலை 6 – இரவு 11)

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு 12)

11. அல் தயாரி மசூதி (Al Tayyari Mosque): 

நடைபெறும் நாட்கள்:  பிப்ரவரி  5 முதல் 16 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 6 – இரவு 11)  

வியாழக்கிழமை – சனிக்கிழமை (மாலை 6 – இரவு 12)

ஒளி கிராமம் (Light Village):

நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 5 முதல் 23 வரை

நேரம்: ஞாயிறு – புதன் கிழமை (மாலை 5 – இரவு 12)

வியாழன் – சனிக்கிழமை (மாலை 5 –  பகல் 1)

ஷார்ஜாவின் பல்கலைக்கழக நகர மண்டபத்திற்கு வெளியே அமைந்துள்ள “ஒளி கிராமம்”  (Light Village) முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் உள்ளே, சிறப்பு காபி முதல் உயர் மதிப்பீடு பெற்ற பர்கர் இடங்கள் வரை, அயல்நாட்டு முதல் பாரம்பரிய உணவுகள் என பல்வேறு உணவு வகைகளும் இந்த ஒளி விழாவில் அங்கம் பெற்றுள்ளன.

கட்டணம்: பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு AED 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.