2025 புத்தாண்டை குடும்பத்துடன் இணைந்து கொண்டாட வானவேடிக்கை, ட்ரோன் ஷோ, லேசர் ஷோ என அடுக்கடுக்காக பல கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த அபுதாபி அல் வாத்பாவில் நடைபெற்று வரும் ஷேக் சையத் திருவிழா ஒருங்கிணைத்துள்ளது. இந்த பிரம்மாண்ட கொண்டாட்டங்களில் ஆறு கின்னஸ் உலக சாதனையையும் முறியடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வானவேடிக்கை கொண்டாட்டங்கள் உட்பட திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள்
வானவேடிக்கை கொண்டாட்டங்கள்:
இந்த கொண்டாட்டங்களில் முக்கிய நிகழ்வாக 50 நிமிடங்கள் வரை நீடிக்கும் உலகின் மிக நீண்ட வானவேடிக்கையை நிகழ்த்தி உலக சாதனையை முறியடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வானவேடிக்கைகள் டிசம்பர் 31, மாலை 06 மணியில் இருந்து மணிக்கு ஒரு முறை நிகழ்த்த விழாக்குழு திட்டமிட்டுள்ளது.
ட்ரோன் சாகசங்கள்:
இரவு 11:40 மணியளவில், சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெறும் 6,000 ட்ரோன் நிகழ்ச்சி உட்பட ஆறு கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
லேசர் காட்சிகள்:
The Emirates Fountain stage-ல் விளக்குகள், லேசர்கள் மற்றும் இசையின் திகைப்பூட்டும் காட்சிகளை 4,000-க்கும் மேற்பட்ட நீரூற்று முனைகள் (fountain nozzles ) மற்றும் 80 லேசர் அமைப்புகள் மூலம் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வானை அலங்கரிக்கும் பலூன்கள்:
சுமார் 100,000-க்கும் மேற்பட்ட பலூன்களை வானில் பறக்கவிட்டு, விழாக் கோலத்தை அழகியதாகவும் வண்ணமயமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கலாச்சார விழாக்கள்:
மதியம் 02 மணியில் இருந்து அல் அயாலா மற்றும் அல் ரஸ்ஃபா போன்ற கலாச்சார இசை, நடனம் ஆகியை 600 கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது. இது மட்டுமின்றி, நாட்டிற்கான அரங்குகளில் வண்ணமயமான நிகழ்வுகளும் அரங்கேறவுள்ளன.
குடும்பங்களுக்காக:
குடும்பங்கள் விரும்பும் நிகழ்வாக பலவற்றை குழந்தைகளுக்காக தனித்துவமான அரங்குகள் மற்றும் 130-விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காக்களை காட்சிப்படுத்தப்படுகிறது.
மிகப்பெரும் திரைகள்:
நிகழ்வுகளை காண முடியாவதர்களுக்கு, பெஸ்டிவலுக்கு வெளியே மிகப்பெரும் திரைகள் மூலம் கொண்டாட்டங்களை நேரடியாக காண வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அரங்கம் நிரம்பியதும் நுழைவாயில்கள் மூடப்படும். புத்தாண்டை குடும்பத்துடன் இணைந்து மகிழ்வதற்கான ஷேக் சையத் திருவிழா தயாராகி வருகிறது.
