அபுதாபி சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாஸ் குறித்து முழு விவரம்:

அபுதாபியை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக மாற்ற கலாச்சாரம் & சுற்றுலாத் துறை மற்றும் எத்திஹாட் விமான நிறுவனம் இணைந்து, அபுதாபி வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கும், எத்திஹாட் பயணிகளுக்கும் The Abu Dhabi Pass எனும் இலவச டிஜிட்டல் டிக்கெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பாஸ் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • 10 GB டேட்டவுடன் இலவச சிம் கார்டு
  • பொது பேருந்துகளில் இலவச பயணம்
  • 24 மணி நேரமும் hop-on-hop-off சுற்றுலா பேருந்துகளில் இலவச பயணம்
  • Qasr Al Watan மற்றும் Louvre Abu Dhabi போன்ற சுற்றுலா தலங்களுக்கு 15% வரை தள்ளுபடி
  • யாஸ் தீவின் பொழுதுபோக்கு மையங்களான Ferrari World, Warner Bros. World, SeaWorld மற்றும் Yas Waterworld போன்ற பகுதிகளுக்கு செல்ல சிறப்பு சலுகைகள்.
  • 200-க்கும் மேம்பட்ட ரெஸ்டாரண்டுகளில் கூடுதல் சலுகைகள்

எப்படி பெறுவது?

எத்திஹாட் விமானங்களை முன்பதிவு செய்த பின்னர், பயணிகளுக்கு வரும் மின்னஞ்சல் தகவலுடன், இந்த பாஸை பெறுவதற்கான லிங்கும் இணைக்கப்பட்டிருக்கும், அதனை பயன்படுத்தி பாஸை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். 

சுற்றுலாவின் இலக்கு

அபுதாபி 2025 ஆம் ஆண்டில் 130,000-க்கும் அதிகமான பயணிகளை எதிர்பார்பதாக தெரிவித்துள்ளது, இருப்பினும் இந்த பாஸ் நடைமுறைகளை மேலும் எளிமையாக்குவதால் 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 39.3 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளது கலாச்சாரம் & சுற்றுலாத் துறை. 

TAGGED: