9-வது ஆண்டு துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (DFC – Dubai Fitness Challenge) அதிகாரப்பூர்வ தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 1 சனிக்கிழமை முதல் நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை வரை 30 நாட்களுக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய இந்த நிகழ்வு குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது.
எப்போது துவங்கப்பட்டது?
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச், 2017 ஆம் ஆண்டு துபாய் பட்டத்து இளவரசரான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த சேலஞ்ச் தொடங்கப்பட்டதில் இருந்து, 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் முதன்முதலில் 30×30 சவாலாகத் தொடங்கப்பட்டது, துபாய் குடியிருப்பாளர்கள் ஒரு மாதம் முழுவதும் தினந்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இது தொடங்கப்பட்டது.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2025:
அந்த வகையில் இந்தாண்டு துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் ஒரு புதிய லோகோவுடன் மேம்படுத்தப்பட்ட உற்சாகத்துடன் வரவிருக்கிறது. பணி புரிய மற்றும் சுற்றுலா செல்ல சிறந்த இடமாக மாற்றும் நோக்கத்துடன், முழு மாதம் இலவசமான மற்றும் அனைவரும் பங்கேற்கக்கூடிய 30 நாட்கள் உடற்பயிற்சி நிகழ்வுகள், ஃபிட்னஸ் கிராமங்கள், சமூக மையங்கள் மற்றும் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்வில் 30 நாட்களுக்கு இலவச உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதோடு உடற்பயிற்சிக்கு தொடர்புடைய சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படும்.
முக்கிய நிகழ்வுகள்:
- DP World Dubai Ride – நவம்பர் 2
- Dubai Stand-Up Paddle – நவம்பர் 8 மற்றும் 9
- Dubai Run – நவம்பர் 23 – இந்த புகழ்பெற்ற ஓட்டம் ஷேக் சயீத் சாலையில் நடைபெறுகிறது.
- Dubai Yoga – நவம்பர் 30
நிகழ்வில் பங்கேற்பது எப்படி?
பல்வேறு ஃபிட்னஸ் வகுப்புகள் மற்றும் சவால்களுக்கு பதிவு செய்யும் வசதி தற்போது திறக்கப்படவில்லை. ஆனால், விரைவில் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் இணையதளத்தில் பதிவு செய்ய முடியும்.
