உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், திறமையான தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக நிர்வாகிகளை கவர அமீரகம் புதிய “வணிக வாய்ப்புகளுக்கான விசாவை” அறிமுகம் செய்தது அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP).
வணிக வாய்ப்புகளுக்கு பயன்படும் இந்த விசா, தேவைகள் மற்றும் முறையான தொழில்களின் அடிப்படையில், ஒரு முறை அல்லது பல முறை நாட்டிற்கு அனுமதியை வழங்குகிறது. வருகை புரிவோர் மொத்தம் 180 நாட்களுக்கு மிகாமல் நாட்டில் இருக்கும் படி இந்த விசா அனுமதிக்கிறது.
நிபந்தனைகள் என்ன?
இந்த விசாவை விண்ணப்பிக்க ICP நான்கு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
விண்ணப்பதாரர் அமீரகத்தில் வணிகத்திற்காக ஆய்வு செய்ய நினைக்கும் துறையில் ஒரு தகுதி வாய்ந்த நிபுணராக இருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
அமீரகத்தில் சுகாதார காப்பீடு பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.
அதிகாரிகள் கூறியது என்ன?
அமீரகம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஒரு விரிவான சேவை சூழலை நிறுவியுள்ளது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்க மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதுமையான மூலோபாய திட்டங்களை தொடங்க உள்ளதாக , ICP-யின் டைரக்டர் ஜெனரல் சுஹைல் சயீத் அல் கைலி கூறியுள்ளார்.
மேலும் அமீரகம் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சட்ட கட்டமைப்புகள் மற்றும் வணிகத்தில் வெற்றி பெரும் சேவைகளை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
