குடியிருப்பு விசா காலாவதியானாலும் நுழைவு அனுமதி இன்றி அமீரகத்திற்கு வரலாம்! புதிய அறிவிப்பு!

அமீரகத்தின் குடியிருப்பு விசா பிப்.28-க்குப் பிறகு காலாவதியாகி, தற்போது வெளிநாடுகளில்  இருக்கும் நபர்கள், புதிய நுழைவு அனுமதி இன்றி மீண்டும் நாட்டிற்குத் திரும்பலாம் என ICP அறிவித்துள்ளது.  

பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றச் சூழல்  மற்றும் வான்வெளி மூடல்  காரணமாக, பல குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து அமீரகத்திற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். 

நுழைவு அனுமதி தேவையில்லை:

இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பு உரிமை பெற்றவர்களது  குடியிருப்பு விசா (Residency Visa) காலாவதியாகி இருந்தாலும், புதிய நுழைவு அனுமதி (Entry Permit) பெறாமல், அமீரகத்திற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது வரை:

இந்த நடைமுறை பிப்.28, 2026 அன்று மற்றும் அதற்கு பிறகு குடியிருப்பு  விசா காலாவதியானவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த சலுகை மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளங்கள், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான மத்திய ஆணையம் (ICP – Federal Authority for Identity, Citizenship, Customs & Port Security) இந்தத் தற்காலிக நடவடிக்கையை அறிவித்துள்ளது.

ஏன் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது?

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் சரியான நேரத்தில் அமீரகம் திரும்ப முடியாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அமீரகம் திரும்பிய பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தங்களின் குடியிருப்பு விசாவை முறைப்படி புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

TAGGED: