மூடுபனி & லேசான மழைக்கு வாய்ப்பு; அமீரகத்தின் வானிலை நிலவரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மூடுபனி மற்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.  

வானிலை நிலவரம்:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன், காணப்படும். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். ஒரு சில இடங்களில் இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நாளை காலை வரை நாட்டின் மேற்குப் பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் அதிக ஈரப்பதம் நிலவும். இதன் காரணமாக அதிகாலை வேளைகளில் அடர்ந்த மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை காலையிலும் இதே நிலை நீடிக்கும் என்பதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் வடக்குப் பகுதிகளில் வெப்பநிலையானது சற்று குறையத் தொடங்கும். சனிக்கிழமையன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், காற்றில் தூசியின் அளவு சற்று அதிகமாக இருக்கும். 

கடல் நிலை

அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் அலைகளின் சீற்றம் குறைவாகவே  இருக்கும். காற்று மிதமான வேகத்தில் வீசும் என்றாலும், சில நேரங்களில் பலமான காற்று வீசக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மூடுபனி மற்றும் தூசியால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில் சிரமம்  ஏற்படலாம். எனவே, அதிகாலை நேரங்களில் பயணம் செய்பவர்கள் வேகத்தைக் குறைத்து, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த வாரம்  ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் மிகவும் சீற்றமாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: