ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் இரவுகள் குளிராகவும், லேசான மழை மற்றும் காலை வேளையில் பனிமூட்டமாகவும் இருக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. இதற்கு சைபீரியன் உயர் அழுத்தத்தின் (Siberian high) தாக்கம் காரணமாகும். நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வெப்பநிலை சுமார் ஆறு டிகிரி செல்சியஸ் (6°C) வரை குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக நாட்டின் உட்பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் குளிர் அதிகமாக இருக்கும். வானியல் ரீதியாக டிசம்பர் 23 அன்று குளிர்காலம் தொடங்குகிறது. குளிர்ந்த காற்று காரணமாக காலையில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு, லேசான அல்லது அடர்த்தியான பனிமூட்டம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 4, 2025
வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். டிசம்பர் 4 இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பனிமூட்டம் உருவாகும். மணிக்கு 10 முதல் 20 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 30 கி.மீ/மணி வேகத்திலும் காற்று வீசும்.
டிசம்பர் 5, 2025
வெள்ளிக்கிழமை அதிகாலையில் நாட்டின் உள் பகுதிகளில் பனிமூட்டம் இருக்கும். மேற்குப் பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படும். மேற்குக் கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு. அரபிக்கடல் மற்றும் ஓமன் கடல் சீற்றமாக காணப்படும்.
டிசம்பர் 6, 2025
காலையில் கடலோர மற்றும் உள் பகுதிகளில் லேசான பனிமூட்டம் உருவாகும். மேற்குப் பகுதிகளில் மேகமூட்டமாக காணப்படும். ஓமன் மற்றும் அரபிக் கடலில் அலைகள் குறைவாகவே இருக்கும்.
டிசம்பர் 7, 2025
காலையில் கடலோர மற்றும் உள் பகுதிகளில் ஈரப்பதம் தொடரும், பனிமூட்டம் இருக்கும். ஓமன் மற்றும் அரபிக் கடலில் அலைகள் குறைவாகவே இருக்கும்.
கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பும் இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
