சமூக ஊடக விதிகளை மீறும் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு அமீரக மீடியா கவுன்சில் விதிக்கும் அபராதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஊடக சட்டம்
அமீரகத்தில் டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த இந்த ஆண்டு மே 29ஆம் தேதி புதிய ஊடக சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்கள் ஊடக சட்டத்தின் விதிகளை மீறினால் அமீரக மீடியா கவுன்சில் அபராதம் விதிக்கும். இந்த தண்டனை நாட்டின் சமூக நல்லிணக்கத்தையும், தார்மீகக் கட்டமைப்பையும் பாதுகாக்கும். மேலும் மக்களிடையே பொறுப்பான தகவல் தொடர்பை ஊக்குவிக்கும்.
உள்ளடக்கம் தொடர்பான மீறல்களும் அபராதங்களும்
1. தவறான தகவல் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை வெளியிட்டால் AED 5,000 முதல் AED 150,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
2. இளைஞர்களை அவமதிக்கும் அல்லது தாழ்ந்த கருத்துக்களை ஊக்குவித்தால் AED 100,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.
3. குற்றச் செயல்களைத் துண்டினால் AED 150,000 வரை அபராதம்.
4. இஸ்லாமிய நம்பிக்கைகளையோ அல்லது பிற மதங்களையோ அவமதித்தால் AED 1 மில்லியன் வரை அபராதம் செலுத்த வேண்டும்.
5. மாநில சின்னங்கள் அல்லது தலைமையை அவமதித்தல் AED 500,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
6. தேசிய ஒற்றுமை அல்லது வெளிநாட்டு உறவுகளை அவமதித்தால் AED 250,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.
7. அரசு மற்றும் தேசிய சின்னங்களை அவமதித்தால் AED 50,000 முதல் AED 500,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.
8. உள்நாட்டு அல்லது சர்வதேச கொள்கைகளை அவமதித்தால் AED 50,000 முதல் AED 500,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
9. வெளிநாட்டு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தேசிய ஒற்றுமை/சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு AED 250,000 வரை அபராதம்.
10. அவதூறு கருத்து AED 20,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
