ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

துபாயில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிக்களுக்கான முக்கிய செய்தியாகும். அக்டோபரில் துபாயில் நிகழப்போகும் முக்கியமான மாற்றங்கள் மற்றும் மீண்டும் திறக்கப்படும் பிரபலமான இடங்களைப் பற்றிய தகவல்களின் வெளியிடப்பட்டுள்ளது.

1. குளோபல் வில்லேஜ் 

துபாயின் பிரபலமான கலாச்சார மற்றும் குடும்ப பொழுதுபோக்குத் தளமான குளோபல் வில்லேஜ், தனது 30-வது சீசன் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பருவத்தில் 10.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 30 ஆண்டுகளில் குளோபல் வில்லேஜ் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக உள்ளது. மேலும் இந்த குளோபல் வில்லேஜ் உலக நாடுகளை பிரதிநிதிக்கொள்ளும் பவிலியன்கள், சர்வதேச உணவகங்கள், நேரலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஷாப்பிங் அனுபவங்களையும் உள்ளடக்கியுள்ளது.

2. மீண்டும் இயங்க தயாராகும் துபாய் நீருற்று

துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவின் அடியில் உள்ள பிரபலமான துபாய் நீருற்று ( Dubai Fountain) கடந்த ஏப்ரல் மாதம் முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. தற்போது, இந்த நீருற்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் எமார் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய நீர் தடுப்பு அடிப்பகுதி, நீர்ப்புகா அடுக்குகள் மற்றும் தண்ணீருக்குள் பிரகாசிக்கும் நீல டைல்ஸ்கள் போன்ற அம்சங்களுடன் இந்த நீருற்று மீண்டும் திறக்கப்படுகிறது.

3. சஃபாரி பூங்கா & மிராக்கிள் கார்டன்

குளிர் காலம் ஆரம்பமாக உள்ளதால் துபாய் சஃபாரி பூங்கா மற்றும் மிராக்கிள் கார்டன் போன்ற வெளிப்புற சுற்றுலா இடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

துபாய் சஃபாரி பூங்கா 

       துபாய் சஃபாரி பூங்கா வரும் அக்டோபர் 14ஆம் தேதி திறக்கப்படுகிறது. இங்கு யானைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் முதலைகள் போன்ற 3,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. 119 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்கா, குளிர் காலங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கு ஏற்ப பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

துபாய் மிராக்கிள் கார்டன்

        துபாய் மிராக்கிள் கார்டன் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய இயற்கை பூங்காவாகும். இங்கு 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மலர்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. எமிரேட்ஸ் நிறுவனம் புதிய நிபந்தனை

அக்டோபர் 1ஆம் தேதி முதல், எமிரேட்ஸ் விமானங்களில் பயணத்தின் போது பவர் பேங்குகள் பயன்படுத்தக்கூடாது என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் அவற்றை ஒரு சில நிபந்தனைகளுடன் பைகளில் மட்டுமே எடுத்துச் செல்லலாம். லித்தியம் பேட்டரிகள், அதிகம் சார்ஜ் செய்தாலோ அல்லது சேதமடைந்தாலோ வெடிக்கும் அபாயம் இருப்பதால் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

5. ஐரோப்பாவின் புதிய நுழைவு/வெளியேறு முறை 

அக்டோபர் 12ஆம் தேதி முதல், ஐரோப்பாவின் செங்கன் பகுதி பயணிகளுக்கு புதிய நுழைவு /வெளியேறும் முறை (EES ) நடைமுறையில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. EES (நுழைவு/வெளியேறு முறை) கைமுறையான பாஸ்போர்ட் முத்திரைகளை மாற்றி, கைரேகை மற்றும் முக ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் சோதனைகளையும் அறிமுகப்படுத்துகிறது. மேலும், பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் பயண தேதிகள் ஆகியவை டிஜிட்டலாக பதிவு செய்யப்படும்.  இந்த தகவல்கள் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக சேமிக்கப்படும். இது ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கும், செங்கன் வீசா கொண்ட ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும்.

6. ஷேக் சையத் விழா 

அபுதாபியில் வரும் நவம்பர் 1 முதல் மார்ச் 22, 2026 வரை நடைபெறும் ஷேக் சையத் விழா, எமிரேட்ஸ் பாரம்பரியத்தையும், உலகளாவிய கலாசாரங்களையும் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வில் தினசரி ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கிராமங்கள் மற்றும் பல சுவையான உணவகங்கள்  இடம்பெறும். இந்தத் திருவிழா தலைநகரின் மிக முக்கியமான கலாச்சாரக் கூட்டங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதிலுமிருந்து குடும்பங்களையும், உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.