அமீரகம் புளூ ரெசிடென்சி விண்ணப்பதாரர்களுக்காக 180 நாட்கள் செல்லும் விசாவை அறிமுகப்படுத்தியது.

அமீரகத்தின் அடையாள அட்டை, குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆணையம் (ICP), தற்போது அமீரகத்திற்கு வெளியே வசிக்கும் ப்ளூ ரெசிடென்சி (Blue Residency) விசா விண்ணப்பிக்கும் நபர்களுக்காக 180 நாட்கள் (ஆறு மாதங்கள்) வரை நுழைவு விசா (Entry Visa) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளூ ரெசிடென்ஸி விசா (Blue Residency Visa) என்றால் என்ன?

ப்ளூ ரெசிடென்சி வீசா என்பது சுற்றுச்சூழல் மற்றும் பசுமை வளர்ச்சியில் பங்களிக்கும் நபர்களுக்கு அமீரகம் அரசு வழங்கும் 10 ஆண்டு விசா ஆகும்.

யார் தகுதியுடையவர்கள்?

  • சிறப்பான பங்களிப்பாளர்கள்: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பெருமைமிக்க பங்களிப்புகள் மற்றும் நேரடி தாக்கம் செலுத்திய நபர்கள்.
  • அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்: உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள். (UAE விஞ்ஞானிகள் பேரவையின் ஒப்புதலுடன் பரிந்துரை செய்யப்பட வேண்டும்)
  • முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்:  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் செயல்படுபவர்கள்.
  • நிபுணர்கள்: UAE-யின் அரசு மற்றும் தனியார் சுற்றுச்சூழல் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல்.
  • சமீபத்திய கலரான புகைப்படம்.
  • ப்ளூ ரெசிடென்ஸிக்கு தகுதி நிரூபிக்கும் ஆதார ஆவணங்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • UAEICP எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது UAEICP செயலி மூலம் வின்ணப்பிக்கலாம்.
  • தேவையான தகவல்களும் ஆவணங்களும் பதிவேற்றம் செய்து, கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பம் சமர்ப்பித்த பின், மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

ப்ளூ ரெசிடென்ஸி திட்டம், UAE-யின் நிலைத்தன்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியில் நடைபெற்ற World Government Summit-இல் முதல் கட்டமாக, நிலைத்தன்மை துறையில் 20 தலைசிறந்த நிபுணர்களுக்கு ப்ளூ ரெசிடென்ஸி வழங்கப்பட்டது.

இது, ஏற்கனவே அறிமுகமான தங்க மற்றும் பசுமை ரெசிடென்ஸி திட்டங்களுக்கு பின் நடைமுறைப்படுத்தப்படும் புதிய நீண்டகால குடியிருப்பு முயற்சியாகும்.

TAGGED: