புதிய ஊடகச் சட்டம்: இந்த 12 ஊடக நடவடிக்கைகளுக்கு உரிமம் தேவை

உரிமம் இல்லாமல் ஊடக நடவடிக்கைகளை செயல்படுத்துவதை தடுக்கும் விதமாக புதிய ஊடகச் சட்டம் மே 29 அன்று அமலுக்கு வந்தது. இந்நிலையில் உரிமம் தேவை தேவைப்படும் 12 ஊடக நடவடிக்கைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அமீரக மீடியா கவுன்சில் அல்லது அதன் தொடர்புடைய அதிகாரசபையிடமிருந்து உரிமம் அல்லது அனுமதி பெறாமல், ஊடக நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் செய்யக்கூடாத ஊடக நடவடிக்கைகளின் பட்டியல் இதோ;

  • வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு
  • மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடக செயல்பாடுகள்
  • சினிமா திரைப்படங்கள் மற்றும் பிற கலை உள்ளடக்கத் திரையிடல்கள்
  • தனிநபர்களால் சமூக ஊடக விளம்பரம்
  • அயலக பதிப்புகள் 
  • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடக உள்ளடக்கத்தை அச்சிடுதல், பரப்புதல் மற்றும் வெளியிடுதல்.
  • நிலம், வான்வழி மற்றும் கடல்சார் புகைப்பட நடவடிக்கைகள்
  • வெளிநாட்டு ஊடக அலுவலகங்கள்
  • செய்தி தளங்கள் 
  • செய்தித்தாள் மற்றும் அச்சு வெளியீடுகள் 
  • புத்தக கண்காட்சிகள் 
  • வீடியோ கேம்கள்

முறையான உரிமம் இல்லாமல் ஊடக செயல்பாடுகளில் ஈடுபட்டால் AED 10,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் அதே குற்றத்திற்கு AED 40,000 அபராதம் விதிக்கப்படும் மற்றும் மத நம்பிக்கைகளை அவமதித்தல் AED 1 மில்லியன் வரை என அபராதம் விதிக்கப்படும். இது போன்ற ஊடக நடவடிக்கைகள் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட முழுமையான அபராத விவரங்கள் https://tamilbuzz.ae/uae-media-law-penalties-religious-offenses-fine/ இந்த இணைப்பில் உள்ளது.

TAGGED: