மே மாதம் 29 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ஊடகச் சட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து ஊடக நடவடிக்கைகளுக்கும் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை கொண்டுவந்துள்ளது. அதன் படி மத நம்பிக்கைகளை அவமதித்தல் முதல் உரிய அனுமதியின்றி ஊடகம் இயக்குதல் வரை உள்ள குற்றங்களுக்கு அதிகபட்சமாக AED 1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும்.
உள்ளடக்கம்
முக்கிய குற்றங்கள் மற்றும் அபராதங்கள்:
மத மற்றும் நெறி ஒழுக்க குற்றங்கள்:
- இறைவனை, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் பிற ஸ்வேகர மதங்களை அவமதித்தல் – AED 10,00,000 வரை அபராதம்.
- பொது நெறிமுறைகளை மீறுதல், தீங்கான கருத்துக்களை பரப்புதல் – AED 1,00,000 வரை அபராதம்.
- கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றை தூண்டும் விதமாக வெளியிடுதல் – AED 1,50,000 வரை அபராதம்.
நாட்டின் சுயமரியாதை மற்றும் நலன்கள்:
- ஆட்சி அமைப்புகள், தேசியச் சின்னங்கள், அல்லது அரசு நிறுவனங்களை அவமதித்தல் – AED 50,000–500,000 வரை அபராதம்.
- உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகளை அவமதித்தல் – AED 50,000 – AED 500,000 வரை அபராதம்.
- வெளிநாட்டு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தேசிய ஒற்றுமை அல்லது சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக கருத்து வெளியிடுதல் – AED 2,50,000 வரை வரை அபராதம்.
அனுமதி இல்லாமல் ஊடக நடவடிக்கைகள்!
அனுமதியின்றி ஊடக செயற்பாடுகள் – முதன் முறை AED 10,000, மறுமுறை AED 40,000.
- உரிமத்தை 30 நாட்களில் புதுப்பிக்கத் தவறினால் – நாள் ஒன்றுக்கு AED 150 (அதிகபட்சம் AED 3,000)
- உரிமத்தில் ஒப்புதலின்றி விவரங்களை மாற்றுதல், பார்ட்னர்களை சேர்த்தல் அல்லது மாற்றுதல் – AED 20,000 வரை.
- காலாவதியான உரிமத்துடன் தொடர்ந்த பணி செய்தல்– முதன் முறை AED 10,000, மீண்டும் மீண்டும் AED 20,000.
தவறான தகவல், தவறான அறிவிப்புகள்:
- தவறான தகவல்களை பரப்புதல் – முதன் முறை AED 5,000, மீண்டும் மீண்டும் செய்தால் AED 10,000.
நிகழ்ச்சி மற்றும் வெளியீட்டு மீறல்கள்
- அனுமதியின்றி புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்தல் அல்லது தடை செய்தல் – AED 40,000 அபராதம்.
- ஊடக உள்ளடக்கங்களை அனுமதியின்றி அச்சிடுதல், பரப்புதல் – AED 20,000.
வெளிநாட்டு நிருபர்கள்
- உரிய அனுமதியின்றி பணிபுரிந்தால் – அதிகபட்சம் 3 எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் விடப்படும், மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால் AED 10,000 அபராதம்.
