துபாய்–ஷார்ஜா இடையே புதிய பேருந்து சேவை!: RTA அறிவிப்பு!

துபாய் – ஷார்ஜா இடையே புதிய வழித்தடத்தில்  மே 2ஆம்  தேதி முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. மேலும் பல்வேறு வழி தடங்களில் பேருந்து சேவையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.  சாலை மற்றும் போக்குவரத்து  ஆணையம் (RTA) சார்பில் துபாய் – சார்ஜா இடையே பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. இதில் இரு நகரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு புதிய வழித்தடம் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி E308 என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஸ்டேடியம் பேருந்து நிலையத்தில் இருந்து ஷார்ஜாவின் அல் ஜுபைல்  பேருந்து நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படும். இந்த புதிய வழித்தடத்தில் அடுக்குமாடி பேருந்துகள் செல்லும் அதற்கான கட்டணம் ஒரு முறை செல்ல AED 13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட RTA பேருந்து பாதைகள்:

வழி 17: Al Sabkha Bus Station பதிலாக Baniyas Square Metro Station-இல் முடிவடைகிறது.

வழி 24: Al Nahda 1 பகுதியில் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழி 44 : Al Rebat Street-இல் இருந்து மாற்றப்பட்டு Dubai Festival City-க்கு சேவை வழங்கப்படுகிறது

வழி  56:  DWC Staff Village வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழி  66 & 67:  Al Ruwayah Farm பகுதியில் புதிய நிறுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

வழி  32C: Al Jafiliya Bus Station முதல் Al Satwa Bus Station வரை சேவை குறைக்கப்பட்டுள்ளது. Route F27 மூலம் பயணத்தை தொடரலாம்.

வழி  C26: Al Jafiliya Bus Station-இல் இருந்து Max Metro Land Side Bus Stop 2-க்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

வழி E16: Al Sabkha Bus Station பதிலாக Union Bus Station-இல் முடிவடைகிறது.

வழி F12: Al Satwa Roundabout முதல் Al Wasl Park வரையிலான பகுதி நீக்கப்பட்டுள்ளது; இப்போது Kuwait Street வழியாக செல்லும்.

வழி  F27: Al Jafiliya Bus Station-இல் இருந்து Max Metro Land Side Bus Stop 2-க்கு மாற்றப்பட்டுள்ளது.

வழி  F47: Jebel Ali Industrial Area-வில் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழி  F54: புதிய JAFZA South Labour Camp வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழி  X92: Al Jafiliya Bus Station-இல் இருந்து Max Metro Land Side Bus Stop 1-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

”பொது போக்குவரத்து வலையமைப்பை விரிவாக்கவும், மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து போன்ற பிற போக்குவரத்து முறைகளுடன் அதன் ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் RTA உறுதிபூண்டுள்ளது. பலமுகப்பாட்டு இணைப்பை மேம்படுத்துவது, அமீரகத்தில் பொது போக்குவரத்தை முன்னிலை போக்குவரத்து தேர்வாக நிலைநிறுத்துவதற்கான முக்கிய அம்சமாகும்” என RTA பொது போக்குவரத்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் ஷாகெரி குறிப்பிட்டார். 

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இயங்கும் சில பேருந்து வழித்தடங்களில்  துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மாற்றங்களை கொண்டுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGGED: