செப்டம்பர் 2025க்கான எரிபொருள் விலை; பெட்ரோல் விலை சற்று உயர்வு!

அமீரகத்தில் 2025 செப்டம்பர் மாதத்தில் பெட்ரோல் விலை சற்று உயர்வை கண்டுள்ளது. அதுவே டீசல் விலை சற்று குறைந்துள்ளது. 

அமீரகத்தின் எரிசக்தி அமைச்சகத்தின் எரிபொருள் விலை நிர்ணயக் கமிட்டி நிர்ணயித்துள்ள செப்டம்பர் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5% வாட் வரியுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் & டீசல் விலை நிலவரம்

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லிட்டர் சூப்பர் 98 பெட்ரோல் விலை AED 2.69-இல் இருந்து AED 2.70-ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெஷல் 95 பெட்ரோல் லிட்டர் ஒன்று AED 2.58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 1 பில்ஸ் அதிகரித்துள்ளது. இ-பிளஸ் வகை பெட்ரோல் ஆகஸ்ட் மாதத்தில் லிட்டருக்கு AED 2.50 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இம்மாதம் AED 2.51க்கு விற்பனையாகிறது. 

கடந்த மாதம் டீசல் லிட்டர் ஒன்று AED 2.78 என விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  இம்மாதம் 12 பில்ஸ் குறைக்கப்பட்டு 2.66 AED என விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை நிலவரம் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. 

TAGGED: