தேசிய நோய் தடுப்பு திட்டத்தில் HPV பயன்பாடு; WHO-வின் பாராட்டை பெற்ற அமீரகம்!

பல்வேறு பால்வினை நோய்களை குணப்படுத்தும், HPV (Human Papillomavirus) தடுப்பூசியை 2018-லிருந்து தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் பயன்படுத்தி வரும் அமீரக அரசை கௌரவித்தது உலக சுகாதார மையம் (WHO).

எகிப்து தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற WHO-ன் நோய்த்தடுப்புக்கான அத்தியாவசியத் திட்டத்தின் 50-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக அமீரகத்தின் தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில், HPV (Human Papillomavirus) தடுப்பூசி பயன்படுத்தியதை ஊக்குவிக்கும் வகையில் அமீரக அரசு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பொதுவாக மருத்துவர்களால் இளம் பருவத்தினருக்கு பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளில், HPV தடுப்பூசி பொதுவாக மருத்துவர்களால் இளம் பருவத்தினருக்கு பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளில், HPV தடுப்பூசி முதன்மையானது, ஏனெனில் இது பல்வேறு பால்வினை நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, மகளிருக்கு ஏற்படும் கர்பப்பை வாய் புற்று நோய்க்கு இது தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் WHO வால் ஊக்குவிக்கப்படும் இந்த தடுப்பூசியை தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் அமீரகம் பயன்படுத்தி வந்தது, மேலும், சமீபத்தில் இது 13 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கும் இது அத்தியாவசியமாக்கப்பட்டது.

பொது சுகாதாரத் துறைக்கான உதவி துணைச் செயலாளர், Dr Hussain Abdul Rahman Al Rand, HPV (Human Papillomavirus) மற்றும் கர்பப்பை வாய் புற்று நோயைத் தடுக்க அமீரகம் தொடர்ந்து போராடும் என்றும் இது போன்ற முன்னெடுப்புகளால் மருத்துவத் துறையில் அமீரகம் வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.