இந்தியர்களுக்கான அமீரக விசா ஆன் அரைவல் திட்டத்தில் மேலும் ஆறு புதிய நாடுகள் சேர்ப்பு!

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் UK போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சேவையில், தற்போது மேலும் ஆறு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. 

புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகள்:

  • சிங்கப்பூர்
  • ஜப்பான்
  • தென் கொரியா
  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • கனடா

செயல்முறை என்ன?

ஆறு புதிய நாடுகளின் செல்லுபடியாகும் விசாக்கள், ரெசிடென்ட் பெர்மிட் அல்லது கிரீன் கார்டுகள் வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு விசா ஆன் அரைவல் வழங்கப்படும். 

ICP அறிக்கை

அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகங்கள், பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) வெளியிட்ட  அறிக்கையில்,  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே உறவுகளை வலுப்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், திறமையான தொழிலாளர்கள், தொழில்முனைவோரை நாட்டிற்கு ஈர்க்கவும் இதனை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விசா ஆன் அரைவலுக்கான கட்டணம் AED 100 எனவும், விசாவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க கட்டணம்  AED 250 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 60 நாள் விசா வழங்குவதற்கான கட்டணமும் AED 250 ஆகும்.

பொருந்தக்கூடிய விதிமுறைகளின்படி ஆறு மாத பாஸ்போர்ட் செல்லுபடியாகும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை செலுத்த வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது .

TAGGED: