அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட்டது அமீரக கல்வி அமைச்சகம்!

அமீரகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மேக்கப் போடக்கூடாது, கருப்பு காலணிகள் அணிய வேண்டும் உள்ளிட்ட 10 ஆடை கட்டுப்பாடு விதிகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

2025-26 கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து பல புதிய நடவடிக்கைகளை அமீரக கல்வி அமைச்சகம் (MoE) மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பள்ளிச் சீருடை நாட்டின் கல்வி மதிப்புகளைப் பிரதிபலிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அமீரக கல்வி அமைச்சகம் இந்தப் புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. 

பள்ளி சீருடை மற்றும் பள்ளி நேரங்களில் மாணவர்களின் தோற்றம் குறித்த 10 வழிகாட்டுதல்கள்

1. அனைத்து மாணவர்களும் தங்கள் வகுப்பு நிலைக்கு ஏற்ப பள்ளியால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையை மட்டும் அணிய வேண்டும்.

2. பள்ளிச் சீருடை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

3. மாணவர்கள் பள்ளி சீருடையில் கருப்பு நிற காலணி அணிய வேண்டும் அல்லது கருப்பு நிற ஸ்னீக்கர்களுடன் வெள்ளை நிற சாக்ஸ் அணிய வேண்டும். ஸ்போர்ட்ஸ் தினம் அல்லது வேறு ஏதேனும் விசேஷ நாட்களின் போது ஸ்போர்ட்ஸ் சீருடையுடன் பிற வண்ணங்களில் ஸ்னீக்கர்கள் அணிய  அனுமதிக்கப்படுகிறது.

4. உள்ளூர் மரபுகளுக்கு ஏற்ப சிகை அலங்காரம் இருக்க வேண்டும். மேலும் ஹேர் டை பயன்படுத்தக் கூடாது. 

5. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி சீருடையுடன் கருப்பு, வெள்ளை அல்லது கடற்படை நீல நிற ஷைலா அணியலாம்.

6. மாணவர்கள் கந்தூராவின் கீழ் வெள்ளை ஆடைகளை சாதாரண அல்லது விளையாட்டு காலணிகளுடன் அணிய வேண்டும். 

7. அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அட்டவணையின்படி, அனைத்து மாணவர்களும் PE வகுப்புகளின் போது விளையாட்டு சீருடையை அணிய வேண்டும்.

8. பள்ளியில் நெயில் பாலிஷ் போட மற்றும் ஒப்பனை செய்ய அனுமதி இல்லை.

9. அங்கீகரிக்கப்பட்ட பள்ளி சீருடை விதிகளை அனைத்து மாணவர்களும் பின்பற்றுவதை உறுதிசெய்ய பள்ளியில் தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

10. ஒரு மாணவர் பள்ளி சீருடை அல்லது பள்ளி வருகை விதிகளை மீறினால், பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

TAGGED: