குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரவில் பாதுகாப்பாக நீந்தி மகிழும் வகையில், அபுதாபி கார்னிச்சில் ‘நைட் பீச்’ என்ற புதிய வசதியை அபுதாபி நகராட்சி தொடங்கியுள்ளது.
குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரவில் பாதுகாப்பாக நீந்தி மகிழும் வகையில், அபுதாபி கார்னிச்சில் ‘நைட் பீச்‘ என்ற புதிய வசதியை அபுதாபி நகராட்சி தொடங்கியுள்ளது.இந்த கடற்கரையில் உயிர்காப்பாளர்கள், முதலுதவி சேவைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
நீச்சலுக்கு 1,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ளது. கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்களும் உள்ளன. அபுதாபியில் இரவு நேரங்களில் கடற்கரைக்கு குடியிருப்பாளர்கள் அதிகளவில் வருவதைக் கருத்தில் கொண்டு இந்த, இரவு நேர கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை!
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகளை கல்வி அமைச்சகம் செய்து வரும் நிலையில் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்துள்ளது.
மாணவ மாணவர்களின் கல்வித்திறன் மேம்படவும், பள்ளி வளாகத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் மற்றும் நேர்மறையான நடத்தையை ஊக்குவிக்கவும் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்படுவதாக கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, பள்ளி நிர்வாகம் மொபைல் போன்களை கண்டறிய வழக்கமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்போன் கொண்டு வந்தால் ஒரு மாதம் செல்போன் பறிமுதல் செய்யப்படும். மீண்டும் இதே தவறு நடைபெறும் பட்சத்தில் ஒரு கல்வி ஆண்டு முழுவதும் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய முறையில் அமேசான் டெலிவரி
கிக் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் முயற்சியாக துபாயில் கால்நடையாகச் சென்று டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தனிநபர்கள் வருமானம் ஈட்ட உதவுவதுடன், வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
இந்த திட்டத்திற்காக துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் & அமேசான் யுஏஇ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இதற்கு ஒப்புதல் அளித்தார்.
கால்நடையாகச் சென்று டெலிவரி செய்யும் முயற்சி தனிநபர்கள் கூடுதல் வருமானம் ஈட்ட அனுமதிக்கும். மேலும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கார்பன் வெளியேற்றம் குறையும். இந்த திட்டம் துபாயின் பொருளாதாரத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துபாயில் அதிகரித்து வரும் மக்கள்தொகை!
துபாயின் மக்கள்தொகை 4 மில்லியனைத் தாண்டியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. அதன்படி தினமும் சுமார் 567 புதிய குடியிருப்புகளை துபாய் வரவேற்கிறது.
இது, நகரத்தின் விரைவான வளர்ச்சி, முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய பயண மையமாக அதன் நற்பெயர் ஆகியவற்றைக் காட்டுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 567 புதிய குடியிருப்பாளர்கள் வருகிறார்கள்.
இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆகிய நாடுகளிலிருந்து அதிக மக்களை ஈர்க்கும் நகரமாக துபாய் உள்ளது 2040-க்குள் மக்கள்தொகை 6 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் புதிய திட்டங்கள் வேகமாக விரிவடைந்து, நகரின் பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன.
திர்ஹமுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவு
திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 24.04 ஆகக் குறைந்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், பணம் அனுப்ப இதுவே சிறந்த நேரம்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரி காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து தற்போது திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.
இந்திய ரூபாயின் முக்கிய சரிவுகள்
- ஒரு திர்ஹமுக்கு 20 ரூபாய் – மார்ச் 5, 2020
- ஒரு திர்ஹமுக்கு 21 ரூபாய் – மே 9, 2022
- ஒரு திர்ஹமுக்கு 22 ரூபாய் – செப்டம்பர் 2022
- ஒரு திர்ஹமுக்கு 23 ரூபாய் – நவம்பர் 29, 2024
- ஒரு திர்ஹமுக்கு 24 ரூபாய் – ஆகஸ்ட் 29, 2025
