ஐக்கிய அரபு அமீரகத்தில் நேரடி ஷாப்பிங்கில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே முழு VAT பணத்தைத் திரும்பப் பெற்று வரும் பட்சத்தில் இப்போது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது அதையே எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் போது செய்த ஆன்லைன் ஷாப்பிங்களுக்கு, புதிய VAT ரீஃபண்ட் செயல்முறை கொண்டு வரப்பட்டுள்ளது, இதுவே உலகளவில் முதல் முறை என்றும் கூறப்படுகிறது. இதனை, VAT ரீஃபண்ட் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட ஆபரேட்டரான Planet உடன் இணைந்து கொண்டுவந்துள்ளது FTA’s (Federal Tax Authority).
VAT ரீஃபண்ட் செயல்முறை:
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் தாங்கள் வாங்கியவை அனுப்பப்படுவதற்கு (Before shipping) முன்பு, பதிவுசெய்யப்பட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூலம் நேரடியாக VAT பணத்தைத் திரும்பப்பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தின் போது பயண ஆவண விவரங்கள் மற்றும் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்கள் ஆன்லைனில் வாங்கும் போதே தகுதியை சரிபார்க்க முடியும்.
டெலிவரியின் போதோ அல்லது ஆன்லைன் ஆர்டரை நிறைவேற்றும் போதோ, சுற்றுலாப் பயணிகளின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன் VAT பணத்தைத் திரும்பப்பெறும் பதிவு நிறைவடைகிறது.
அதிகாரிகள் கூறுவது என்ன?
FTA வின் டைரக்டர் ஜெனரல் காலித் அலி அல் புஸ்தானி இது குறித்து கூறுகையில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் இ-காமர்ஸ் கொள்முதலின் மீது VAT வசூலிக்க உதவும் உலகின் முதல் மின்னணு அமைப்பை அறிமுகப்படுத்தியதில் மத்திய வரி ஆணையத்தின் வெற்றியைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”.என்றார்.
இந்த திட்டங்கள் ‘எதிர்கால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கான படைப்பாற்றல்’ மற்றும் ‘சேவைகளை வழங்குவதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்துதல்’ ஆகியவற்றின் தேவையை அடிப்படையாகக் கொண்டவை.
“இந்த குறிப்பிடத்தக்க சாதனையானது, உலகளவில் நாட்டின் டிஜிட்டல் போட்டித்திறன் மற்றும் புதுமை செயல்திறன் குறிகாட்டிகளை மேம்படுத்துவதற்கு பங்களிக்கிறது, சுற்றுலா மற்றும் இ-காமர்ஸ் உட்பட அனைத்து துறைகளிலும் ஐக்கிய அரபு அமீரக தலைமையை ஆதரிக்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
