அபுதாபியில் மூடுபனி, துபாயில் வெப்பம்; அமீரகத்தின் இன்றைய வானிலை நிலவரம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை காலம் முடிவடையும் நிலையில், தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவும். அபுதாபியின் சில பகுதிகளில் இன்று காலை மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM).

AccuWeather தகவலின்படி, துபாயில்  அதிகபட்ச வெப்பநிலை 41°C ஆக இருக்கும். காற்றில் உள்ள புழுதி காரணமாக பார்வைத் திறனும், காற்றின் தரமும் பாதிக்கப்படலாம் இன்று இரவு, வானம் மேகமூட்டத்துடன், அதிக வெப்பத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 33°C ஆக இருக்கும்.

அபுதாபியில் புழுதி நிறைந்த, வெப்பமான வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 41°C ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 32°C ஆக இருக்கும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என கணித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மேகங்கள் உருவாகி, ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறித்த கணிப்புகள்:

  • உள்நாட்டுப் பகுதிகள்: 42°C முதல் 47°C வரை
  • கடலோரப் பகுதிகள்: 38°C முதல் 43°C வரை
  • மலைப் பகுதிகள்: 31°C முதல் 36°C வரை

நேற்று அல் ஐன் பகுதியில் 48.5°C வெப்பநிலை பதிவானது.

இன்று இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை, குறிப்பாக கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: