ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்கால வானிலை தற்போது நிலையற்ற தன்மையைப் பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பும் இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு:
இன்று (நவ. 25) நாடு முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்படும். மேற்குப் பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் அதிகமாகி, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை:
கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அதிகபட்சம் 32∘C முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 27∘C வரை இருக்கும். நாட்டின் உட்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 35∘C முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 29∘C வரை இருக்கும்.
மலைப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 26∘C முதல் குறைந்தபட்சம் 20∘C வரை இருக்கும். இரவு நேரத்தில் கடலோரத்தில் 16∘C வரையும், நாட்டின் உட்பகுதியில் 11∘C வரையும், மலைகளில் 12∘C வரையும் குறையக்கூடும்.
இரவு மற்றும் புதன் காலை நேரத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். நாட்டின் உட்பகுதியில் லேசான பனிமூட்டம் இருக்கும். லேசானது முதல் மிதமானது வரை (மணிக்கு 10–25 கி.மீ), சில நேரங்களில் மணிக்கு 35 கி.மீ வரை வீசும்.
நவம்பர் 26:
புதன்கிழமை (நவம்பர் 26) அன்று மேகமூட்டமான வானிலை தொடரும். வெப்பநிலை சற்று குறைய வாய்ப்புள்ளது. அன்று இரவு மற்றும் வியாழன் காலை நேரத்தில் கடலோர மற்றும் நாட்டின் உட்பகுதியில் ஈரப்பதம் அதிகரிக்கும்.
நவம்பர் 27
வியாழக்கிழமை (நவம்பர் 27) அன்று வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும் அத்துடன், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 28:
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நீடிக்கும்.
கடந்த வாரம் அமீரகத்தில் வானம் தெளிவாக அல்லது ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நாட்டின் மேற்குப் பகுதிகளில் சில சமயங்களில் பலமான காற்றுடன் தூசி நிறைந்த வானிலை நிலவும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
