ஆன்லைன் தரவுத்தளமான Numbeo வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை அபுதாபி பிடித்துள்ளது.
தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக டாப் 5-வில் அபுதாபி
இங்கிலாந்தை தளமாக கொண்ட ஆன்லைன் தரவுத்தளமான Numbeo ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் நடுப்பகுதியிலும் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் அமீரக தலைநகர் அபுதாபி முதலிடத்தை பிடித்துள்ளது. 2017 முதல் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் அபுதாபி இடம்பிடித்து வருகிறது.
அஜ்மான், துபாய், ராஸ் அல் கைமா & ஷார்ஜா
இந்தப் பட்டியலில் அபுதாபியை தொடர்ந்து இரண்டாவது இடத்தை அஜ்மான் பிடித்துள்ளது. துபாய் நான்காவது இடத்திலும், அதை தொடர்ந்து ராஸ் அல் கைமா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 6வது இடத்தில் ஷார்ஜா உள்ளது.
மக்களின் நம்பிக்கை பெற்ற நகரங்கள்
நவீன உட்கட்டமைப்பு, நன்கு ஒளிரும் தெரு விளக்குகள், குறைந்த குற்ற விகிதம் ஆகியவை இந்த 5 அமீரக நகரங்களை உலகின் பாதுகாப்பான நகரங்களில் முன்னிலைப்படுத்துகிறது. இதனால் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி மக்களின் நம்பிக்கையை இந்த நகரங்கள் பெற்றுள்ளன.
பாதுகாப்பான முதல் 10 நகரங்கள்
1. அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்
2. அஜ்மான், ஐக்கிய அரபு அமீரகம்
3. தோஹா, கத்தார்
4. துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
5. ராஸ் அல்-கைமா, ஐக்கிய அரபு அமீரகம்
6. ஷார்ஜா, அமீரகம்
7. தைபே, தைவான்
8. மஸ்கட், ஓமன்
9. தி ஹேக் (டென் ஹாக்), நெதர்லாந்து
10. தம்பேர், பின்லாந்து
