சமீபத்தில்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சிவப்பு சாயம் கலந்த உணவுகளை அமெரிக்கா தடை செய்ததை தொடர்ந்து, அமீரகமும் தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உணவு மற்றும் மருந்து நிறுவனங்களுக்கு காலக்கெடு:
FDA உணவு நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளும், மருந்து தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகளும் தயாரிப்புகளை மறுசீரமைக்க கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
அமீரகம் கூறுவது என்ன?
அமீரகம் சிவப்பு நிற சாயம் கலந்த உணவுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக காலநிலை மாற்றம் & சுற்றுச்சூழல் அமைச்சகம் (MOCCAE) தெரிவித்துள்ளது.
தொழில்துறை & தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து, நுகர்வோர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவியல் கொள்கைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப குறிப்புகள் மற்றும் விதிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. விஞ்ஞான மதிப்பீடுகள் மற்றும் சர்வதேச தரங்களின் அடிப்படையில் உணவில் சாயம் மற்றும் கலப்படங்களை சேர்க்க நாட்டில் கடுமையான விதிமுறைகள் உள்ளன என்றும் MOCCAE தெரிவித்துள்ளது.
