அபுதாபியில் புதிய உணவுக் கொள்கைகளை வெளியிட்ட ADEK
அபுதாபியின் கல்வி மற்றும் அறிவுத் துறையானது (Adek) எமிரேட்டில் உள்ள பள்ளிகளில் சத்தற்ற உணவுகளுக்கு தடை விதிப்பதாகவும், 2025/26 கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு சேவைகளை வழங்கும் பள்ளிகள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்க வேண்டும் என்றும் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
ADEK- வெளியிட்ட புதிய கொள்கை வழிகாட்டுதல்கள்
- பள்ளி மாணவர்களின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளும் உணவுகளை உட்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும்.
- அனைத்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு நாளும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யவேண்டும். (ரமலான் நோன்பை தவிர)
- உணவு தொடர்பான நடத்தைகளைக் கண்காணிக்க வேண்டும்.
உணவு தொடர்பான நடத்தைகளைக் கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஆல்கஹால், கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் அலர்ஜி கொண்ட உணவுகள் போன்ற சில உணவுப் பொருட்கள் தடைசெய்யப்படுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், அலர்ஜி (allergens) கொண்ட உணவுகள் போன்ற பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் தனிப்பட்ட நுகர்வு அல்லது பள்ளி வளாகத்தில் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
முக்கியமாக பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உறுதி செய்வதற்கு பெற்றோரின் ஈடுபாடு முக்கியமானது.
ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிகள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்:
பள்ளி வளாகத்திற்குள் உணவு சேவைகளை வழங்கும்போது அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
ஆசிரியர்களும், கேன்டீன் ஊழியர்களும் பொது சுகாதார மையம் (ADPHC) மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களால் நடத்தப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், தலாபத், டெலிவரூ போன்ற வெளிப்புற உணவு விநியோக சேவைகளை பள்ளி நேரங்களில் தடை செய்ய வேண்டும்.
மறு பரிசீலனைகள்
அபுதாபி உணவு பாதுகாப்பு விதிமுறைகளால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அலர்ஜியுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிக்க பள்ளிகள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து, பள்ளிகள் சிறுபான்மை குழுக்களின் மத, கலாச்சார மற்றும் நெறிமுறை தேவைகளை மதிக்க வேண்டும்.
இதில், உணவு சேவைகள் மற்றும் உணவு லேபிளிங் தொடர்பான முடிவுகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
பள்ளி வழங்கும் உணவில் ஏதேனும் அலர்ஜி இருப்பதை உணவு லேபிள்கள் தெளிவாகக் குறிப்பிடுவதை உறுதிசெய்யவும்.
பெற்றோர்கள் கவனத்திற்கு….
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.
அலர்ஜி பதிவுகளை தொடர்புடைய ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
