🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

குளோபல் வில்லேஜ் (Global Village) – குழந்தைகளுக்கு சீசன் முடியும் வரை இலவசம்!

துபாயின் மிகவும் பிரபலமான வெளிப்புற ஈர்ப்புகளில் ஒன்றான குளோபல் வில்லேஜ் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவை பெறலாம் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்த சலுகை மே மாதம் 11 வரை வழங்கப்படவுள்ளது. இந்த ஆண்டின் குளோபல் வில்லேஜ் சீசன் தற்போது முடிவை நோக்கி செல்வதால்  பல்வேறு புதிய வசதிகள் மற்றும் சிறந்த அனுபவத்தையும் வழங்குகிறது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

யாருக்கெல்லாம் இலவசம்?

  • 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் இந்த சீசன் முடியும் வரை இலவசமாக நுழைவை அனுபவிக்கலாம். 
  • 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மன உறுதியுள்ளவர்கள் மட்டுமே இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர்.

கோடை மாதத்தில்  மூடல்:

குளோபல் வில்லேஜ் தனது 29 தாவது சீசனை அதிகாரப்பூர்வமாக மே 11 அன்று முடிவடைய செய்கிறது.

டிக்கெட்டுகள் கட்டணம்: 25 AED.

திறந்திருக்கும் நேரம்:

  •  திங்கள் முதல் வியாழன் வரை: மாலை 4:00 மணி முதல்  இரவு 12:00 மணி வரை.
  • வெள்ளி, சனி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்: மாலை 4:00 மணி முதல் இரவு 1:00 மணி வரை.