துபாயில் இருந்து மதுரைக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த விமான சேவை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை காலை 11.40 மணிக்கு சென்றடைவது வழக்கம் ஆகும்.
துபாயில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் நேரடி விமான சேவையின் நேரத்தில் ஜன.5,2026 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நேர விபரங்கள்:
முன்னதாக, துபாயில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், மதுரைக்கு காலை 11:40 மணிக்கு வந்து சேர்ந்தது. தற்போதைய புதிய அட்டவணைப்படி:
துபாய் ➡️ மதுரை: அதிகாலை 1:55 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு, காலை 7:40 மணிக்கு மதுரை வந்தடையும்.
மதுரை ➡️ துபாய்: காலை 8:50 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, முற்பகல் 11:25 மணிக்கு துபாய் சென்றடையும்.
இதனால் பயணிகள் தங்களது பயண நேரத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களில் பவர் பேங்க்கை பயன்படுத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
