துபாயில் 2025ஆம் ஆண்டு 29 புதிய மசூதிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மசூதிகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய மசூதிகள்
துபாயில் அதிகரித்து வரும் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அதன் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் விதமாக புதிய மசூதிகள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 2025ஆம் ஆண்டு 29 புதிய மசூதிகள் திறக்கப்பட்டுள்ளதாக துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை தெரிவித்துள்ளது.
துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை AED 250 மில்லியன் செலவில் 24,000 பேர் வரை வழிபடும் வகையில் 29 புதிய மசூதிகளைத் திறந்து வைத்துள்ளது.
புதிதாகத் திறக்கப்பட்ட மசூதிகளுடன், 2026ஆம் ஆண்டில் துபாயின் 37 பகுதிகளில் கூடுதல் மசூதிகளை கட்டுவதற்காக 56 நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தற்போது AED 480 மில்லியன் செலவில் 36 பகுதிகளில் 53 மசூதிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மசூதிகளில் 32,000 பேர் வரை வழிபட முடியும் என்று கூறப்படுகிறது.
