2026-ஆம் ஆண்டுக்கான உலக அரசாங்க உச்சிமாநாட்டின் (World Government Summit) போது Gallup நிறுவனம் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கையின்படி, பொது மக்கள் திருப்தியில் ஐக்கிய அரபு அமீரகம் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு அல்லது அரசாங்க செயல்பாடு குறித்து எந்தக் கவலையும் இன்றி திருப்தியாக உள்ளனர்.
இந்தப் பட்டியலில் அமீரகத்தை தொடர்ந்து குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. அடுத்த தலைமுறையினர் தங்களை விட சிறப்பாக வாழ்வார்கள் என்று 63% அமீரக வாசிகள் கூறுகின்றனர். இது உலகளாவிய சராசரியை (32%) விட இரண்டு மடங்கு அதிகம்.
அமீரகம் ஒட்டுமொத்தமாக முதலிடத்தில் இருந்தாலும், இங்குள்ள மக்கள் சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம், உலகளாவிய போக்குகள் ஆகிய துறைகளில் முன்னேற்றமடைய விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு 107 நாடுகளில் நடத்தப்பட்டது. இது குறித்து Gallup நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கிளிப்டன், “மக்கள் முன்னேற்றத்தை GDP வரைபடங்கள் மூலம் உணர்வதில்லை; மாறாகத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்புகள் மூலமே உணர்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
