ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சகம் (MoE), நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கான அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான (2026-2029) அதிகாரப்பூர்வ கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிடுதல் மற்றும் கல்வி அமைப்பின் தயார்நிலையை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
2026-2027 கல்வி ஆண்டு:
- மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டு ஆகஸ்ட் 31, 2026 அன்று தொடங்கி, ஜூலை 2, 2027 அன்று முடிவடையும்.
- முதல் பருவ இடைக்கால விடுமுறை அக்டோபர் 12 முதல் அக்டோபர் 18, 2026 வரை இருக்கும். மீண்டும் அக்டோபர் 19, 2026 அன்று வகுப்புகள் தொடங்கும்.
- குளிர்கால விடுமுறை டிசம்பர் 14, 2026 முதல் ஜனவரி 3, 2027 வரை இருக்கும். மீண்டும் ஜனவரி 4, 2027 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
- வசந்த கால விடுமுறை மாணவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 11, 2027 வரை இருக்கும். மீண்டும் ஏப்ரல் 12, 2027 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
2027-2028 கல்வி ஆண்டு:
- மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டு ஆகஸ்ட் 30, 2027 அன்று தொடங்கி, ஜூன் 30, 2028 அன்று முடிவடையும்.
- முதல் பருவ இடைக்கால விடுமுறை அக்டோபர் 11 முதல் அக்டோபர் 17, 2027 வரை இருக்கும். மீண்டும் அக்டோபர் 18, 2027 அன்று வகுப்புகள் தொடங்கும்.
- டிசம்பர் 13, 2027 முதல் ஜனவரி 2, 2028 வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஜனவரி 3, 2028 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
- மாணவர்களுக்கு மார்ச் 27 முதல் ஏப்ரல் 2, 2028 வரை வசந்த கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஏப்ரல் 3, 2028 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
2028-2029 கல்வி ஆண்டு:
- மாணவர்களுக்கான இந்த கல்வி ஆண்டு ஆகஸ்ட் 28, 2028 அன்று தொடங்கி, ஜூன் 29, 2029 அன்று முடிவடையும்.
- முதல் பருவ இடைக்கால விடுமுறை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 22, 2028 வரை இருக்கும். மீண்டும் அக்டோபர் 23, 2028 அன்று வகுப்புகள் தொடங்கும்.
- டிசம்பர் 11, 2028 முதல் ஜனவரி 1, 2029 வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஜனவரி 2, 2029 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
- மாணவர்களுக்கு மார்ச் 29 முதல் ஏப்ரல் 1, 2029 வரை வசந்த கால விடுமுறை அளிக்கப்படும். மீண்டும் ஏப்ரல் 2, 2029 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
இந்தியப் பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்துமா?:
இந்த புதிய கால அட்டவணை அமீரக பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அவர்கள் தங்களின் வழக்கமான கல்வி முறையையே பின்பற்றலாம்.
முக்கிய விதிமுறைகள்:
- அக்டோபர் மாதத்தில் வரும் 5 நாள் இடைப்பருவ (Mid-term Break) விடுமுறையை அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் தேவைக்கேற்ப இந்த விடுமுறையை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் பிரித்து வழங்க அனுமதி கோரலாம்.
- ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் அந்த எமிரேட்டின் கல்வி ஆணையத்தின் (Sharjah Private Education Authority) பிரத்யேக விதிமுறைகளைப் பின்பற்றும்.
- மாணவர்கள் ஒவ்வொரு பருவத்தின் கடைசி வாரம் வரை பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தேர்வுகள் மற்றும் முக்கிய பாடங்கள் கடைசி நாள் வரை திட்டமிடப்பட வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- இந்த மூன்று ஆண்டுத் திட்டமானது, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுமுறை காலங்களை முன்கூட்டியே திட்டமிடவும், மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
