வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்; அமீரகத்தின் இந்த வார வானிலை அறிக்கை!

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கணிப்புப்படி, இன்று (புதன்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் சீரற்ற வானிலை நிலவும். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாற்றம் ஏற்படுகிறது.

தினசரி வானிலை அறிக்கை:

புதன்கிழமை (இன்று): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மற்றும் மேற்கு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்றினால் தூசு மற்றும் மணல் பறக்கக்கூடும். வெப்பநிலை சற்று குறையும். 

கடலோரப் பகுதிகளில் 24°C முதல் 33°C வரையிலும், உள்நாட்டுப் பகுதிகளில் அதிகபட்சமாக 33°C வரையிலும் வெப்பநிலை பதிவாகலாம்.   இன்று கடல் சீற்றமாக இருக்கும், ஆனால் மதியத்திற்குப் பிறகு ஓரளவு சாதாரணமாக மாறும்

வியாழக்கிழமை: ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இரவு நேரங்களில் ஈரப்பதம் அதிகரித்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேற்கு பகுதிகளில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை: மேற்கு கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அன்றைய தினத்திலிருந்து வெப்பநிலை படிப்படியாக உயரத் தொடங்கும்.

சனி மற்றும் ஞாயிறு: வானிலை லேசான மேகமூட்டத்துடனோ காணப்படும். இருப்பினும், அதிகாலை நேரங்களில் கடலோரப் பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டம் நிலவக்கூடும்.

TAGGED: