அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெற்ற ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி!

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி  ஜனவரி 23, 2026 அபுதாபி, யாஸ் தீவில் எத்திஹாட் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை கண்டும், கேட்டும் ரசித்தனர். மேலும் இந்நிகழ்வின் போது  ஏ.ஆர். ரகுமானின்  மகன் ஏ.ஆர். அமீன் இசையமைத்த முதல் பாடல் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என ஏ.ஆர். அமீன் அறிவித்தார். 

இந்த நிகழ்ச்சி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பல தசாப்த கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது. அவரது புகழ்பெற்ற தமிழ் மற்றும் இந்தித் திரைப்படப் பாடல்கள் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பாடப்பட்டன.

அபுதாபியின் மிக முக்கியமான பொழுதுபோக்கு மையமான எத்திஹாட் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு, மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ரஹ்மானின் உலகளாவிய ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடினர்.

இந்நிகழ்ச்சியை ‘ஆயுத எழுத்து’ படத்தில் வரும் புகழ்பெற்ற “ஜன கண மன” பாடலுடன் தொடங்கிய ஏ.ஆர். ரஹ்மான்  நிகழ்ச்சியின் இறுதியில் “வந்தே மாதரம்” / “மா துஜே சலாம்” பாடலைப் பாடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற “ஜெய் ஹோ”  பாடலும் இசைக்கப்பட்டன.

TAGGED: