துபாய் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட மசூதிகளில் ஈத் அல் பித்ர் தொழுகை நடத்த அறிவிப்பு!

துபாய் முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட மசூதிகளில் ஈத் அல்-பித்ர் தொழுகை மார்ச் 20 காலை 6:40 மணிக்கு நடைபெறவுள்ளது. 

பெருநாள் தொடக்கம்: 

மார்ச் 20, 2026 அன்று ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படும்.
மார்ச் 19 ரமலான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும். துபாயில் பெருநாள் தொழுகை காலை 6:40 மணிக்கு நடைபெறும். முன்னதாகவே அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மசூதிகளில் மட்டுமே தொழுகை:

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு பொது இடங்களிலோ அல்லது திடல்களிலோ தொழுகை நடத்தப்பட மாட்டாது. துபாயில் உள்ள 900-க்கும் மேற்பட்ட மசூதிகளில் மட்டுமே தொழுகை நடைபெறும்.

 இந்த ஆண்டு பெருநாளும், வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் வருவதால், ஈத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை ஆகிய இரண்டையும் அந்தந்த நேரங்களில் மசூதிகளுக்கு சென்று நிறைவேற்ற வேண்டும் என்று ஃபத்வா கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலைகளில் ஓதப்படும் ‘துஆ அல் குனூத்’ (Dua Al Qunoot) துபாய் மசூதிகளில் ஃபஜ்ர் மற்றும் மக்ரிப் தொழுகைகளின் போது ஓதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • தொழுகைக்கு வருபவர்கள் விரைவாகவே மசூதிக்கு  வருமாறும், பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த இனிய நாளில் குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துபாயின் ‘முஅத்தின் அல் ஃபிரீஜ்’ (Muezzin Al Freej) திட்டத்தின் மூலம் நகரம் முழுவதும் தக்பீர் முழக்கங்கள் ஒலிக்கச் செய்யப்பட்டு, பெருநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.

TAGGED: