ஷார்ஜா மற்றும் ஓமனின் சோஹார் மற்றும் மஸ்கட் நகரங்கள் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைக்கான நேர அட்டவணையை ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) மாற்றி அமைத்துள்ளது.
எல்லை தாண்டிய பயணங்களை மேலும் எளிதாக்கவும், பயணிகளுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஷார்ஜா மற்றும் ஓமனின் சோஹார் மற்றும் மஸ்கட் நகரங்கள் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி பேருந்து சேவைக்கான நேர அட்டவணையை மாற்றியுள்ளது.
Route 203 என்றழைக்கப்படும் இந்த சர்வதேச பேருந்து சேவை ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுகிறது.
புதிய நேர அட்டவணை விவரங்கள்
ஷார்ஜாவில் இருந்து ஓமனின் மஸ்கட் நகருக்கு புறப்படும் பேருந்துகள்.
- காலை 06:30 மணி
- பிற்பகல் 03:30 மணி
- இரவு 08:30 மணி
ஓமனின் சோஹார் மற்றும் மஸ்கட்டில் இருந்து ஷார்ஜாவிற்கு வரும் பேருந்துகள்.
- காலை 7.00 மணி
- மதியம் 1.30 மணி
- பிற்பகல் 3.00 மணி
பயணிகள் தங்களின் பயணத்தை சீராகவும் தடையின்றியும் மேற்கொள்ள, இந்த புதிய நேர அட்டவணையை சரிபார்த்து, முன்கூட்டியே திட்டமிடுமாறு ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) அறிவுறுத்தியுள்ளது.
