கோவை To UAE… துப்பாக்கி சுடுதலில் வரலாற்றுச் சாதனை படைத்த வீராங்கனை சரண்யா தேவி ‘தமிழ் Buzz துபாய்’ அலுவலகத்தில் சிறப்புச் சந்திப்பு!

குவைத்தில் நடைபெற்ற Al-Kandari Shooting Competition-ல் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர் கோவையைச் சேர்ந்த தமிழக வீராங்கனை சரண்யா தேவி.

அவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி ‘தமிழ் Buzz துபாய்’ ஊடகத்தின் அழைப்பை ஏற்று அதன் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளரான அவரை தமிழ் Buzz துபாய் ஊடகக் குழுவினர் பூங்கொத்து வழங்கி அன்புடன் வரவேற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் தனது பயணம், எதிர்கொண்ட சவால்கள், கடின உழைப்பின் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்ற தருணம் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும், சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று, தேசியக் கொடியை உயர்த்துவதே தனது மிகப்பெரிய கனவு என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது அமீரகத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வரும் சரண்யா தேவிக்கு, ‘தமிழ் Buzz துபாய்’ ஊடகக் குழுவினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு நினைவுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

TAGGED: