Meta One அறிமுகம் முதல் குளோபல் வில்லேஜ் திறப்பு தேதி அறிவிப்பு வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

குளோபல் வில்லேஜ் திறப்பு தேதி அறிவிப்பு

உலக புகழ்பெற்ற துபாய் ‘Global Village’ வரும் அக்.14ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த சீசன் அடுத்தாண்டு (2027) மே மாதம் வரை தொடர்ந்து செயல்படும். இம்முறை அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக, உலகத்தரம் வாய்ந்த உணவுகள், புதிய சாகசங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல்வேறு விஷயங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

A More Wonderful World என்பது தான் இந்தாண்டின் கருப்பொருளாகும். இந்தியப் பெவிலியனில் காஷ்மீரி நகைகள், தாய்லாந்து மாம்பழங்கள், யேமன் தேன், சீனா பெவிலியனில் உடைகள் என உலக நாடுகளின் சிறப்புப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கலாம். 

5 நிமிடத்தில் International டிரைவிங் லைசன்ஸ்

துபாய் விமான நிலையத்தில், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் வெறும் 5 நிமிடங்களில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3வது டெர்மினலில் உள்ள ‘Customer Happiness’ சென்டரில் இந்தச் சேவையை 24 மணிநேரமும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைசன்ஸ் பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

அமீரகத்தில் Meta One அறிமுகம் 

மெட்டா (Meta) நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்காக ‘மெட்டா ஒன்’ (Meta One) என்ற புதிய சந்தா முறையை (Subscription Service) ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் Meta AI ஆகியவற்றின் வழக்கமான அடிப்படை சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே இருக்கும்.  இந்தச் சந்தா மூலம் கூடுதல் AI கருவிகள், புதிய அம்சங்கள் மற்றும் சிறப்பு வசதிகளைப் பெற முடியும்.

கட்டண விவரங்கள் (மாதத்திற்கு):

தனிநபர் ஆப் திட்டங்கள்

  • வாட்ஸ்அப் பிளஸ்: AED 5.99
  • இன்ஸ்டாகிராம் பிளஸ் (Instagram Plus): AED 7.99
  • ஃபேஸ்புக் பிளஸ் (Facebook Plus): AED 7.99

தனிநபர் பண்டில் திட்டங்கள் (Bundles for Individuals):

  • கோர் (Core): AED 22.99
  • பிரிமியம் (Premium): AED 76.99

தொழில்முனைவோர் & படைப்பாளர்களுக்கான திட்டங்கள் (Creators & Businesses):

  • எசன்ஷியல் (Essential): AED 46.99 முதல்
  • அட்வான்ஸ்டு (Advanced): AED 119 முதல்
  • எக்ஸ்பர்ட் (Expert): AED 359 முதல்

Deep fake-ஐ கண்டுபிடிக்கும் AI

‘Deep fake’ வீடியோக்களைக் கண்டுபிடிக்க ‘SARAAB’ என்ற புதிய AI மாடலை துபாய் மின்னணு பாதுகாப்பு மையம் (DESC) அறிமுகம் செய்யவுள்ளது. இது, வீடியோக்களை முழுமையாக ஸ்கேன் செய்து போலியாக உருவாக்கப்பட்ட காட்சிகளை துல்லியமாக காண்பிக்கும். வீடியோவில் சில வினாடிகள் போலியாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதைக் கண்டறியும். 

வீடியோக்களை முழுமையாக ஆய்வு செய்து, முகத்தில் எந்தப் பகுதி போலியாக மாற்றப்பட்டுள்ளது என்பதை ‘ஹீட் மேப்’ (Heat map) மூலம் சுட்டிக்காட்டும். இந்த AI மாதிரி 91% துல்லியத்தன்மையுடன் இயங்கக்கூடியது.  

இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘Hugging Face’ என்ற திறந்த மூலப் (Open-source) தளத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் யார் வேண்டுமானாலும் இதன் குறியீடுகளைப் பார்க்கவும் மேம்படுத்தவும் முடியும்.  அரபு பிராந்தியத்தில் அரசு அமைப்பால் உருவாக்கப்பட்ட முதல் AI மாதிரி இதுவாகும். 

பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் அறிமுகம்

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு (Sheikh Zayed Grand Mosque) வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிதாக நுழைவுக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டண விவரங்கள்

சுற்றுலாப் பயணிகள்: AED 10

எமிரேட்ஸ் ஐடி வைத்துள்ளவர்கள்: AED 5

இலவச அனுமதி: தொழுகைக்காக வருபவர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள்

பார்வையாளர்கள் நேரம்:

சனி முதல் வியாழன் வரை: காலை 9:00 – இரவு 8:30

வெள்ளிக்கிழமை: காலை 9:00 – 11:30 மற்றும் பிற்பகல் 2:30 – இரவு 8:30

TAGGED: