சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா முதல் இசை ஒலிபரப்ப கட்டணம் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

Dubai-it விருதுக்கு விண்ணப்பங்கள் தொடக்கம்

துபாயில் சிறந்த முடிவுகளைப் பெற்ற  திட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், வழங்கப்படும்  Dubai-it விருதுக்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்.10, 2026.

அரசு, தொழில்நுட்பம், வணிகம், சுகாதாரம் உள்ளிட்ட 10 துறைகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. முதல் ஆண்டில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் பரிசீலிக்கப்படும்.

தனிநபர்கள், திட்டங்கள், நிறுவனங்கள் என 3 முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். முதல் ஆண்டில், கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் பரிசீலிக்கப்படும். www.dubai-it.ae என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா 

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை அபுதாபி அரசு அறிவித்துள்ளது. இந்தச் சலுகை 2026 அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

யாருக்கு பொருந்தும்?

  • இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்
  • அபுதாபியில் உள்ள ஹோட்டலில் குறைந்தது 3 இரவுகள் தங்கும் சுற்றுலா பேக்கேஜை முன்பதிவு செய்திருக்க வேண்டும். 
  • மீண்டும் இந்தியா திரும்பும் Return Flight டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட Travel Agencies மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா திட்டத்தை அறிவித்துள்ளது.  இதன்படி, இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு வரும் தகுதியான இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும். 

இந்தத் திட்டம் 2026 அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும். முதற்கட்டமாக 20,000 விசாக்கள் வரை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஃபே மற்றும் உணவகங்களில் இசை ஒலிபரப்ப கட்டணம் 

அமீரகத்தில் விடுதிகள், உணவகங்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட வணிக ரீதியான இடங்களில் இசை/பாடல் ஒலிபரப்ப புதிய இசை உரிமக் கட்டணத்தை அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் டிசம்பர் முதல் அமலுக்கு வருகிறது.

ஹோட்டல்கள், உணவகங்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இசை அல்லது பாடல்களை ஒலிபரப்ப, இசை உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமீரக பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இசை உரிமங்கள் ஓராண்டுக்கு செல்லுபடியாகும் என்றும், அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் காப்புரிமையைப் பாதுகாப்பதுடன், அவர்களுக்கு உரிய ராயல்டி தொகையை சென்றடையச் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் தொடங்கும் தேதி அறிவிப்பு 

புகழ்பெற்ற துபாய் ‘ஃபிட்னஸ் சேலஞ்ச்’ வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தாண்டு, ரன்னிங், சைக்கிளிங், யோக உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் தொடங்குகிறது.

ஈரான் தாக்குதலுக்கு அமீரகம் கண்டனம் 

ஹார்முஸ் நீரிணையில், ADNOC நிறுவனத்தின் 2 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு, அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இத்தாக்குதலில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமீரக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2817 (UN Security Council resolution 2817)-ன் வெளிப்படையான மீறல் இத்தாக்குதல் என அமீரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து மோதல்களையும் உடனடியாக நிறுத்தி, ஹார்முஸ் நீரிணையை நிபந்தனையின்றி முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

TAGGED: