துபாய் – அபுதாபி, புஜைரா இடையே எதிஹாட் ரயில் சேவை தொடக்கம்: நேரம் மற்றும் கட்டண விவரங்கள்!

துபாய் – அபுதாபி, துபாய் – புஜைரா எதிஹாட் ரயில் சேவை செப்டம்பர் 30 முதல் தொடக்கம்.

அமீரகத்தின் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லாக எதிஹாட் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அபுதாபி – புஜைரா இடையே 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட முதல் சேவைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

அமீரகத்தின் முக்கிய எமிரேட்களை அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் இணைக்கும் இந்த ரயில் சேவை, தற்போது துபாய் – அபுதாபி மற்றும் துபாய் – புஜைரா இடையே வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த சேவைக்கான ரயில் புறப்படும் நேரங்கள் மற்றும் டிக்கெட் கட்டண விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1. துபாய் → அபுதாபி எதிஹாட் ரயில் சேவை

துபாய் புறப்படும் நேரம் (Departure)அபுதாபி சென்றடையும் நேரம் (Arrival)
06:14 AM07:18 AM
07:14 AM08:18 AM
01:14 PM02:18 PM
05:14 PM06:18 PM
06:14 PM07:18 PM

டிக்கெட் கட்டண விவரம்

  • Comfort Class (சாதாரண வகுப்பு): AED 39 
  • Premium Class (உயர் வகுப்பு): AED 109 

2. அபுதாபி → துபாய் எதிஹாட் ரயில் சேவை

அபுதாபிபுறப்படும் நேரம் (Departure)துபாய் சென்றடையும் நேரம் (Arrival)
06:43 AM07:47 AM
07:43 AM08:47 AM
12:43 PM01:47 PM
04:43 PM05:47 PM
05:43 PM06:47 PM

டிக்கெட் கட்டண விவரம்

  • Comfort Class (சாதாரண வகுப்பு): AED 39 
  • Premium Class (உயர் வகுப்பு): AED 109 

3. துபாய் → புஜைரா எதிஹாட் ரயில் சேவை 

துபாய் புறப்படும் நேரம் (Departure)புஜைராசென்றடையும் நேரம் (Arrival)
1.57 PM3.07 PM

டிக்கெட் கட்டண விவரம்

  • Comfort Class (சாதாரண வகுப்பு): AED 29 
  • Premium Class (உயர் வகுப்பு): AED 89 

4. புஜைரா → துபாய் எதிஹாட் ரயில் சேவை 

புஜைராபுறப்படும் நேரம் (Departure)துபாய் சென்றடையும் நேரம் (Arrival)
11.54 AM1.04 PM

டிக்கெட் கட்டண விவரம்

  • Comfort Class (சாதாரண வகுப்பு): AED 29 
  • Premium Class (உயர் வகுப்பு): AED 89

டிக்கெட் முன்பதிவு: https://www.etihadrail.ae/

TAGGED: