ஐக்கிய அரபு அமீரகம் போக்குவரத்து விதிகளை மிகக் கடுமையான முறையிலும், துல்லியமாகவும் நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் இந்த விதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிப்பதை ஒரு முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளனர்.
அமீரகம் உலகிலேயே மிக பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நாடுகளில் முதன்மையானதாகும். இங்குள்ள சாலைகளில் விபத்துகளைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நாட்டு அரசு போக்குவரத்து விதிகளை மிகக் கடுமையான முறையில் அமல்படுத்தி வருகிறது. அமீரகத்தில் வாகனங்களை இயக்குபவர்கள் விதிகளுக்கு கட்டுப்பட்டு, கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது கட்டாயமாகும்.
ஏனெனில், இங்குள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களும் போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறியும் திறன் கொண்டவை.
கடுமையான அபராதங்களும் விளைவுகளும்
இங்கு வேக வரம்பை மீறுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது, வாகனத்தை ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது போன்ற சிறிய தவறுகளுக்கு கூட மிக அதிகளவிலான அபராதத் தொகைகள் விதிக்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, பின்வரும் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் பாயக்கூடும்:
அபராதம்: போக்குவரத்து விதிமீறல்களின் தீவிரத்தன்மையைப் பொறுத்து, குறைந்தபட்சம் AED 400 முதல் அதிகபட்சமாக AED 2,00,000 வரை மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.
கருப்பு புள்ளிகள் (Black Points): ஒவ்வொரு விதிமீறலுக்கும் ஓட்டுநர் உரிமத்தில் கருப்பு புள்ளிகள் சேர்க்கப்படும். இவை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
வாகனம் பறிமுதல்: கடுமையான விதிமீறல்களின் போது வாகனங்கள் பல நாட்களுக்குப் பறிமுதல் செய்யப்படலாம்.
1. அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால்?
ஆம்புலன்ஸ், காவல் மற்றும் கான்வாய் வாகனங்களுக்கு சாலையில் முன்னுரிமை அளித்து வழிவிட வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 3,000
கறுப்பு புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 30
2. அதிவேகப் பாதையில் வழிவிடாமல் சென்றால்?
அதிவேகப் பாதை முந்திச் செல்வதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பாதையில் மெதுவாக செல்லவோ அல்லது பாதையை மறிக்கவோ கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 400
கறுப்பு புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
3. பிற வாகனத்தை மிக நெருக்கமாக (Tailgating)
விபத்துகளை தவிர்ப்பதற்காக, முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்பு புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
4. குழந்தைகளை காரின் முன் இருக்கையில் அமர வைத்தால்?
10 வயதிற்குட்பட்ட அல்லது 145 சென்டிமீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட குழந்தைகளை காரின் முன் இருக்கையில் அமர வைக்கக்கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
5. காரில் குழந்தைகளுக்கான இருக்கை இல்லை எனில்?
4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக காரில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பு இருக்கைகளை பொருத்தியிருக்க வேண்டும். அதில் மட்டுமே அமரவைக்க வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
6. பின் இருக்கையில் அமருவோர் சீட் பெல்ட் அணியவில்லை எனில்?
காரில் பின் இருக்கைகளில் அமரும் பயணிகளும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
7. சாலையோரத்தில் (Road Shoulder) வாகனம் ஓட்டினால்?
வாகன ஓட்டிகள் சாலை ஓரப்பகுதியைப் (Road shoulder) பயன்படுத்தி முந்தவோ அல்லது அதில் வாகனத்தை ஓட்டவோ கூடாது. ஏனெனில் இது அவசரக்கால வாகனங்களின் வழியை மறிக்கிறது.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
8. பழுதடைந்த (அ) எரியாத முகப்பு விளக்குகளுடன் வாகனம் ஓட்டினால்?
பழுதடைந்த அல்லது எரியாத முகப்பு விளக்குகளுடன் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்புப் புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
9. சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் சென்றால்?
சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக செல்வது குற்றமாகும்.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 12
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 30
10. அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டினால்?
நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை விட அதிகமான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
விதிமீறல்
அபராதம்: AED 300 முதல் AED 1,000 வரை
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
11. முகப்பு விளக்குகளை அணைத்தபடி வாகனம் ஓட்டினால்?
சூரியன் மறையும் நேரத்திலிருந்து சூரியன் உதிக்கும் வரையும், பனிமூட்டம் நிலவும் போதும் ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனத்தை ஓட்ட வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
12. சாலையில் திடீரென Lane மாறினால்?
முறையான Indicator சிக்னல் கொடுக்காமல், சாலையில் திடீரென Lane மாறுவது அல்லது முன்னறிவிப்பின்றி வாகனத்தை திருப்பக்கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
13. அதிகப்படியான சத்தம் எழுப்பும் வாகனங்களை ஓட்டினால்?
பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் அதிகப்படியான சத்தம் எழுப்பும் வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து விதிகளின்படி குற்றமாகும்.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 12
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 30
14. வாகனத்தின் வடிவமைப்பில் அனுமதியின்றி மாற்றங்கள் செய்தால்?
வாகனத்தின் என்ஜின் அல்லது அதன் வடிவமைப்பில் அனுமதியின்றி மாற்றங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 12
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 30
15. தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால்?
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ரைடர்களும், பயணிகளும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
16. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்?
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், கீழ் குறிப்பிட்டுள்ள தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
விதிமீறல்
அபராதம்: AED 20,000 முதல் AED 100,000 வரை
கருப்புப் புள்ளிகள்: –
சிறை தண்டனை விதிக்கப்பட்டும்
17. போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டினால்?
போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டினால், கீழ் குறிப்பிட்டுள்ள தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்
விதிமீறல்
அபராதம்: AED 30,000 முதல் AED 200,000 வரை
கருப்புப் புள்ளிகள்: –
சிறை தண்டனை விதிக்கப்பட்டும்
18. வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தினால்?
வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
விதிமீறல்
அபராதம்: AED 800
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
19. வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடித்தால்?
வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் எந்தவொரு செயலும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
விதிமீறல்
அபராதம்: AED 800
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
20. சாலை நடுவில் வாகனத்தை நிறுத்தினால்?
அவசரக் காரணம் இன்றி ஓட்டுநர்கள் சாலையின் நடுவே வாகனங்களை நிறுத்தக் கூடாது. இது விபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும்.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
21. பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனங்களை நிறுத்தவில்லை எனில்?
பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கண்டிப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
22. விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால்?
காயங்களை ஏற்படுத்திய விபத்திற்குப் பின், நிறுத்தாமல் சென்றால், தகவல்களை மறைத்தால் கீழ் குறிப்பிட்டுள்ள தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் & இரண்டுமே விதிக்கப்படலாம்.
விதிமீறல்
அபராதம்: AED 20,000 முதல் AED 100,000
கருப்புப் புள்ளிகள்: 6
இரண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும்
23. அனுமதிக்கப்படாத இடங்களில் சாலை கடந்தால்?
பாதசாரிகள் Zebra Crossing, Pedestrian Crossing போன்ற சாலையைக் கடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடக்க வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 400
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
24. காலாவதியான டயர்களை பயன்படுத்தினால்?
வாகனங்களில் காலாவதியான மற்றும் சேதமடைந்த டயர்களை பயன்படுத்தக்கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 7
25. Tint சதவீத வரம்பை மீறினால்?
வாகன ஜன்னல் கண்ணாடிகளுக்கு அனுமதிக்கப்பட்ட Tint அளவு 50% ஐ தாண்டக்கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 1,500
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
26. போக்குவரத்துக்கு இடையூறு செய்தால்?
சாலையில் வாகனங்கள் செல்வதை பாதிக்கும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
27. சாலை விபத்து ஏற்பட்டிருக்கும் போது போக்குவரத்துக்கு இடையூறு செய்தால்?
விபத்து நடந்த இடத்தில் வாகனத்தை நிறுத்துதல், மெதுவாக இயக்குதல் அல்லது நெரிசலை ஏற்படுத்துதல் மூலம் அவசர மீட்புப் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது.
விதிமீறல்
அபராதம்: AED 1,500
கருப்புப் புள்ளிகள்: –
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
28. வாகனத்திலிருந்து குப்பைகளை வீசினால்?
வாகனங்களில் இருந்து குப்பை அல்லது கழிவுப் பொருட்களை சாலையிலோ பொது இடங்களிலோ வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
விதிமீறல்
அபராதம்: AED 1,000
கருப்புப் புள்ளிகள்: 6
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: –
29. வாகனப்பதிவு காலாவதியான வாகனங்களை ஓட்டினால்?
வாகனப்பதிவு காலாவதியான வாகனங்களை ஓட்ட கூடாது. ஒரு மாத அவகாசத்திற்குள் புதுப்பிக்க வேண்டும்.
விதிமீறல்
அபராதம்: AED 500
கருப்புப் புள்ளிகள்: 4
வாகனம் பறிமுதல் செய்யப்படும் நாட்கள்: 7
30. இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால்?
ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
விதிமீறல்
அபராதம்: AED 10,000
கருப்புப் புள்ளிகள்: 6
இரண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டும்
